
இயக்குனர் தியாகராஜா குமார ராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடித்துவரும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தின் முதல் காட்சிக்கு விஜய் சேதுபதி 80 டேக் எடுத்ததாக நடிகை ரம்யா கிருஷ்ணா சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆரண்ய காண்டம் படத்தை இயக்கி, ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஒரே படத்தில் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகத் பாசில், உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கி வருகிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில், இப்படம் வருகிற 29-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படம் பற்றி பேசிய நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்தப் படம் குறித்து இயக்குனர் தன்னை சந்தித்தபோது, முதல் காட்சியே சிறப்பாக இருக்க வேண்டும் என அவரிடம் கூறினாராம். அவரும் முயற்சி செய்வோம் என கூறி சென்றாராம்.
ஆனால் முதல் காட்சியிலேயே, தன்னை 37 டேக் வாங்க வைத்து விட்டார். என் சினிமா வாழ்க்கையில் இத்தனை டேக்குகள் வாங்கியதே இல்லை. என ரம்யா கிருஷ்ணா தெரிவித்தார். இது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி டேக் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது முதல் காட்சியிலேயே விஜய் சேதுபதி 80 டேக்குகள் வாங்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதனை தான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றும், நடிக்கத் தொடங்கிய பிறகுதான் அது புரிந்தது எனவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.