
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'ராட்சசன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது 'ஜகஜல கில்லாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' 'படத்திற்கு தொடர்ந்து இயக்குனர் எழில் இயக்குகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் விஷ்ணுவிஷால் படப்ப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாக காயமடைந்தார். இதனால் ஓரிரு மாதல் க எந்தவித படப்பிடிப்புக்கும் செல்லாமல் ஓய்வு எடுத்தார். தற்போது அவர் முழுமையாக குணமடைந்துவிட்டதால் விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்த நிலையில் பிரபல நடிகரும், தளபதி விஜய்யின் சகோதரரும் விஷ்ணுவின் நண்பர் விக்ராந்தும், ஒரு படத்தில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படம் குறித்த முழுமையான விபரங்கள் விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் விஷ்ணுவிஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.