நில ஆக்கிரமிப்பு வழக்கு... நடிகை விஜயசாந்திக்கு அதிரடி தீர்ப்பு..!

First Published Dec 14, 2017, 1:12 PM IST
Highlights
vijayashanthi land occupaid case verdict


பிரபல நடிகை விஜயசாந்திக்குச் சொந்தமாக கோயம்பேடு அருகே ஒரு இடம் இருக்கிறது. அதில் சிலர் சட்டவிரோதமாக அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்களைக் கட்டி வந்தனர். அதனை எதிர்த்து விஜயசாந்தி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இம்மனு 22-11-17 ஆம் தேதி நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டது. 

இரு தரப்பின் வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி கார்த்திகேயன். பிரதிவாதிக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என தீர்ப்பளித்தார்.  அவர் அளித்துள்ள தீர்ப்பில்...

"பிரதிவாதிகளான வசந்தா, பாலாஜி, நடராஜன், புகழேந்தி மற்றும் கணேஷ் இனிமேல் வாதிக்கு சொந்தமான இடத்தில் எந்த ஒரு ஆக்கிரமிப்புக்  கட்டடங்களையும் கட்டக்கூடாது. மேலும் ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் இடத்தில் இருக்கும் அனைத்து அமைப்புகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும்; இதற்கு எத்தகைய இழப்பீட்டுத் தொகையும் கொடுக்கப்படமாட்டது" என்று நடிகை விஜயசாந்திக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளார். 

click me!