பிறந்த நாளில் ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்த விஜய் ஆண்டனி... தாறுமாறு வைரலாகு “பிச்சைக்காரன் 2” ஃபர்ஸ்ட் லுக்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 24, 2020, 06:09 PM IST
பிறந்த நாளில் ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்த விஜய் ஆண்டனி...   தாறுமாறு வைரலாகு  “பிச்சைக்காரன் 2” ஃபர்ஸ்ட் லுக்...!

சுருக்கம்

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளான இன்று, பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து நடிகராக உருவெடுத்தவர். இவரது இசை பயணத்தின் முதல் படம் “சுக்ரன்” திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் இளசுகளின் மனதை கொள்ளை கொண்டது. அதனால் முதல் படத்திலேயே முன்னணி இயக்குநர்கள் அளவிற்கு பெயரும் புகழும் பெற்றார். 

“காதலில் விழுந்தேன்” படத்தில் இடம் பெற்ற"நாக்க முக்கா" பாடலின் இசைக்காக  2009 ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதை பெற்றார். தமிழில் பல்வேறு படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, 2012ம் ஆண்டு வெளியான நான் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விஜய் ஆண்டனி எடுத்த புது அவதாரம் அவருக்கு மிகப்பெரிய பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. 

 

இதையும் படிங்க: உடலை விட்டு நழுவும் வழு வழு உடையில் அமலா பால்... அதிரடி கவர்ச்சியுடன் அம்மணி சொன்ன வாழ்க்கை தத்துவம்...!

அதன் பின்னர் பல படங்களில் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனிக்கு, பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய கேரியர் பிரேக்காக அமைந்தது. இயக்குநர் சசி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தில் அவர் ஒரு பிச்சைக்காரனாகவே  மாறி நடித்து, கோலிவுட்டின் கவனம் ஈர்த்தார். மற்ற ஹீரோக்கள் நடிக்க தயங்கிய கதாபாத்திரத்தை சவாலுடன் நடித்து காட்டினார். மகன் அம்மா மீது வைத்திருக்கும் அளவில்லாத பாசத்தை காட்டும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

 

இதையும் படிங்க: சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த பிரபல தொகுப்பாளினி டி.டி... வைரல் கிளிக்ஸ்...!!

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளான இன்று, பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிச்சைக்காரன்-2 க்கான கதையை விஜய் ஆண்டனி எழுதியுள்ளார். இந்த கதையை தேசிய விருது பெற்ற "பாரம்" பட இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குவார் என தெரிவித்துள்ளனர். லாக்டவுன் காரணமாக ஷூட்டிங்கை ஆரம்பிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியாததால் 2021ம் ஆண்டு படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. விஜய் ஆண்டனியே இந்த படத்தை தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது. இதோ... 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?