சித்தி 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மற்றம்..! இனிவரும் பதில் இவர் தான்!

By manimegalai a  |  First Published Jul 24, 2020, 5:47 PM IST

ஏற்கனவே சித்தி 2 சீரியலில் நடித்த நடிகர் நடிகைகள் சிலர், மாற்றப்பட்டதாக நடிகை  ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், கூறிய நிலையில், தற்போது மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகையும் மாற்றப்பட்டுள்ளார்.
 


ஏற்கனவே சித்தி 2 சீரியலில் நடித்த நடிகர் நடிகைகள் சிலர், மாற்றப்பட்டதாக நடிகை  ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், கூறிய நிலையில், தற்போது மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகையும் மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: தோளை விட்டு நழுவும் ஃபிளவுஸ்... வெரைட்டி சேலையில் சிறகடிக்கும் விஜய் டிவி பாவனாவின் அதகள கிளிக்ஸ்!
 

Tap to resize

Latest Videos

சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் சின்னத்திரையிலும் கால் பாதித்து, அசுர வளர்ச்சி அடையாலம் என்பதை நிரூபித்தவர் ராதிகா சரத்குமார். "கண்ணின் மணி கண்ணின் மணி" என தொடங்கும் பாடலும், சித்தி என ஒலிக்கும் சிறுமியின் செல்ல சினுங்களும் அனைவரது இல்லத்தையும் ஆக்கிரமித்தது. 1999 முதல் 2001ம் ஆண்டு வரை ஆண், பெண் பேதமின்றி அனைவரையும் தொலைக்காட்சி முன்பு காட்டி போட்டு வைத்தது. 

இந்நிலையில் 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சித்தி - 2 தொடர் ஒளிபரப்பானது.இடையில் கொரோனா பிரச்சனை காரணமாக அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால், தொழிலாளர்கள் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பித்தனர். இதையடுத்து அரசிடம் தங்களது தரப்பு பிரச்சனைகளை எடுத்துரைத்த சின்னத்திரை நிர்வாகிகள் படப்பிடிப்பிற்கான அனுமதியை பெற்றனர். இருப்பினும் 60 பேர் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும், கொரோனா கட்டுப்பாடுகள் என ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர்கள் தரப்பு சில பிரச்சனைகளை சந்தித்தாலும் படப்பிடிப்பை நடத்த சம்மதித்துள்ளனர். 

மேலும் செய்திகள்: தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்ற பட்டாரா பிக்பாஸ் சீசன் 3 நடிகை! பரபரப்பை ஏற்படுத்திய பதிவு!
 

ஆனால் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொரோனா பிரச்சனையால் படப்பிடிப்பு தளத்திற்கு வர தயங்குகின்றனர். சிலரோ சொந்த ஊரில் இருந்து திரும்ப முடியாத சூழ்நிலையில் சிக்கியுள்ளனர். இதனால் பல சீரியல்களில் நடிகர், நடிகைகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி சன் டி.வி.யில் அதிகம் பார்வையாளர்களை கவர்ந்த சித்தி 2 சீரியலிலும் நடிகர்களை மாற்றியுள்ளதாக சமீபத்தில்  ராதிகா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: நடிகர் ஆர்யாவின் பிரமாண்ட வீடு... சாயீஷாவின் புகுந்த வீட்டை பார்க்கலாம் வாங்க!
 

விரைவில் சன் டிவியில் 'சித்தி 2 ஒளிபரப்பாகும்” என்றும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்த பாகைப்படத்தில் மொத்தம் 3 நடிகர்கள் மாறியுள்ளனர். அதில் குறிப்பாக ராதிகாவிற்கு ஜோடியாக நடித்த பொன்வண்ணனுக்கு பதிலாக நிழல்கள் ரவி மாற்றப்பட்டார். ஷில்பாவுக்கு பதில் நடிகை ஜெயலட்சுமி தற்போது நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து, வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஸ்ரீஷா தற்போது ஆந்திராவில் உள்ளதால், அவரால் சித்தி 2 சீரியலில் கலந்து கொள்ளமுடியவில்லை. எனவே அவருக்கு பதில் தற்போது, மீரா கிருஷ்ணா ஒப்பந்தமாகி  உள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக மீரா கிருஷ்ணா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு ராதிகாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.


 

click me!