அனாதைப் பிணமாகக் கிடந்த விஜயகாந்தின் வெற்றி பட இயக்குனர்.. ஏவிஎம் பிளாட்பாரத்தில் உயிரிழந்த சோகம்!

By Kanmani PFirst Published Dec 8, 2021, 12:40 PM IST
Highlights

ஏவி.எம்.ன் 150 வது படமான விஜயகாந்த் நடித்து பிரபலமான மாநகர காவல் ஆகிய  படங்களை இயக்கிய இயக்குனர் M.தியாகராஜன்  ஏவிஎம் ஸ்டுடியோ எதிரிலேயே அனாதையாக  இறந்து கிடந்துள்ளார்.

திரை உலகில் ஒரு காலத்தில் நல்ல வெற்றிகளை பெற்ற பல பிரபலங்களும் பின் நாட்களில் வாய்ப்பு கிடைக்காமல் வாழ்வின் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகியுள்ளது. இன்றும் பல இயக்குனர்களும் நடிகர்ளும் ஏ.வி.எம் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கு வாய்ப்பளிக்காதா என எண்ணி கோடம்பாக்கத்தை சுற்றி வருகின்றனர். இதில் பலர் உணவிற்கு கூட வழியின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அவ்வாறு இன்று காலை சென்னை வடபழனியில் இயக்குனர் ஒருவர் அனாதையாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

90 களில் பிரபல இயக்குனராக இருந்தவர் M.தியாகராஜன் . இவர்  பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, ஏவி.எம்.ன் 150 வது படமான விஜயகாந்த் நடித்து பிரபலமான மாநகர காவல் ஆகிய  படங்களை இயக்கி இருந்தார். அன்று ரசிகர்கள் மத்தியில் வெற்றி கண்ட  இந்த படம் விஜகாந்த்திற்கு  ஒரு திருப்பு முனையாகவே இருந்தது என்றே சொல்லலாம்.

சினிமாவை நம்பி வரும் பெரும்பாலானோர் போலவே ஐவரும் ஒரு கிராமத்திலிருந்து தான் வந்துள்ளார். தியாகராஜன் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். ஊரில் நல்ல அந்தஸ்தை கொண்ட மிகப்பெரிய குடும்பத்தை சேர்ந்தவர். DFT படித்த மாணவரான தியாகரான ஆரம்ப காலகட்டத்தில் அவரது சொந்த ஊர் அருகே விபத்தில் அடிபட்டு கோமாவிலிருந்து பிழைத்து மீண்டும் கோடம்பாக்கத்தை நம்பி வந்து சுற்றியவர்.

பின்னர் ஒரு வழியாக சினிமா வாய்ப்பு கிடைக்க பிரபுவின் வெற்றிக்கு மேல் வெற்றி  மற்றும் விஜயகாந்தின் மாநகர காவல் உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார்.  90 களுக்கு பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். இவர் இயக்கிய இந்த இரண்டு படங்களும் அன்றைய காலகட்டத்தில் நல்ல வசூலை பெற்றுக்கொடுத்தும் ஏன் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

பின்னர் ஊருக்கு திரும்ப மனமின்றி சென்னை வடபழனியில் அழுக்கான உடையோடு கையில் செய்திதாளோடும் அம்மா உணவத்தின் ஆதரவிலும் வாழ்ந்து வந்தார் தியாகராஜன். வெற்றியில் மட்டும் கைகோர்க்கும் இந்த சினிமா உலகம் தோல்வி அடைந்த தன துறையை சார்ந்தவர்களையே கண்டுகொள்வதே இல்லை. 
ஏ.வி.எம் க்கு வெற்றி படங்களை தந்த இயக்குனர் தியாகராஜன் அந்த ஸ்டுடியோவையே பல வருடமாக சுற்றி வருகிறார். இவர் ஒருவர் கண்ணில் கூடவா பட்டிருக்க மாட்டார் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு எதிரில் உள்ள பிளாட் பாரத்தில் அனாதை பிணமாக கிடந்துள்ளார் தியாகராஜன். மாநகர காவல் என்னும் வெற்றி படத்தை தந்த இயக்குனரின் உடல்  கேட்பாரற்று கிடந்துள்ளது. பின்னர் தகவல் அறிந்து வந்த சென்னை மாநகர காவல்துறையினர் ஆம்புலன்ஸ் வரவழைத்து கீழ்ப்பக்கம் மருத்துவமனைக்கு இயக்குனரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

சினிமாவில் வெற்றி மேல் வெற்றி அடையாமல் ஏவிஎம் முன்பாகவே உயிரிழந்து மாநகர காவல் துணையோடு அன்னாரின் இறுதி நாள் இப்படியாக முடிந்தது காலத்தின் கோலமின்றி வேறென்ன..?

click me!