PaRanjith : பா.ரஞ்சித் பிறந்தநாள் ஸ்பெஷல். .. சியான் 61 அப்டேட்டுடன் மாஸ் வீடியோவையும் பகிர்ந்த தயாரிப்பாளர்!!

By Kanmani PFirst Published Dec 8, 2021, 9:57 AM IST
Highlights

Pa Ranjith : பா.ரஞ்சித் பிறந்தநாள் ஸ்பெஷலாக சியான் 61 படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக அறிவித்துள்ள ஸ்டுடியோ கிரீன் ரஞ்சித் இயக்கிய படங்களின் மாஸ் காட்சிகளை கொண்டு வீடியோ ஒன்றையும் உருவாக்கி பகிர்ந்துள்ளது.

பா.ரஞ்சித் ஏற்கனவே தினேஷ் நடிப்பில் அட்டக்கத்தி, கார்த்தி நடித்த மெட்ராஸ், ரஜினிகாந்தின் கபாலி, காலா, ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட ஹிட் படங்களை தமிழுக்கு தந்துள்ளர். இந்நிலையில் பி.ரஞ்சித் முதல் முறையாக சீயான் விக்ரமை இயக்க உள்ளார்.

விக்ரம் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

மகான் திரைப்படத்தில் விக்ரம் தனது  மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த 2 படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கின்றன. கோப்ரா பட வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்த படங்களுக்கு பிறகு விக்ரம் நடிக்கும் 61-வது  படத்தை பா.ரஞ்சித் இயக்க உள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 

இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நாளின் ஸ்பெஷலாக சியான் 61 படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக அறிவித்துள்ள ஸ்டுடியோ கிரீன் ரஞ்சித் இயக்கிய படங்களின் மாஸ் காட்சிகளை கொண்டு வீடியோ ஒன்றையும் உருவாக்கி பகிர்ந்துள்ளது.  செய்ய இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

 

Wishing Filmmaker Pa.Ranjith sir, a very happy birthday💐💐💐

From Loading......
pic.twitter.com/WlYnGrspDM

— Studio Green (@StudioGreen2)

 

click me!