
நீட் தேர்வின் திணிப்பால், மருத்துவராகும் கனவு கனவாகமட்டுமே போய் விட்டதால், மாணவி அனிதா தற்கொலை செய்துக்கொண்டார். இவரின் இறுதி சடங்கில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சீமான், திருமாவளவன், நடிகர் ஜி.வி.பிரகாஷ், போன்ற பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதே போல் பல பிரபலங்கள் வலைதளத்தின் மூலமும் தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர்.
இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக, உடல் நலம் இல்லாததால் ஓய்வில் இருந்து வந்தார்.
இவர் மாணவி அனிதா இறந்த சம்பவத்தை அறிந்ததும், உடனடியாக தன்னுடைய உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் அறியலூருக்கு விரைந்தார். ஆனால் விஜயகாந்த் அங்கு செல்வதற்குள் அனிதாவின் உடலை எடுத்துவிட்டனர்.
உடனடியாக சுடுகாட்டிற்கே சென்று அனிதாவின் முகத்தை பார்த்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினாராம். இவரின் செயலை பார்த்து அந்த கிராமத்து மக்களே ஒரு நிமிடம் வியர்த்து விட்டனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.