தளபதி விஜய்யின் பாராட்டை பெற்ற திரைப்படம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் படக்குழு!

Published : Jan 18, 2019, 11:05 AM ISTUpdated : Jan 18, 2019, 11:13 AM IST
தளபதி விஜய்யின் பாராட்டை பெற்ற திரைப்படம்! மகிழ்ச்சியின்  உச்சத்தில் படக்குழு!

சுருக்கம்

ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பாக விஜய் கிரகந்தர் தயாரிப்பில் பிரசாத் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் "யஷ்" நடிப்பில் உருவான "கே.ஜி.எஃப்" திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாகி அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் பெற்று வசூலில் சாதனைப்படைத்தது.  

"கே.ஜி.எஃப்" நல்ல விமர்சனங்களை பெற்றிருந்ததை அறிந்த "தளபதி" விஜய் இப்படத்தை காண விரும்பினார். அவருக்காக சென்னையில் ப்ரத்யேகமாக இப்படத்தை படக்குழுவினர் திரையிட்டனர்.

படத்தை பார்த்த நடிகர் விஜய், "கே.ஜி.எஃப்" படம் எடுக்கப்பட்ட விதம் பிரம்மாண்டமாகவும், நடிகர்களின் நடிப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளதாக பாராட்டினார். படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

"தளபதி" விஜய்யின் பாராட்டை பெற்ற "கே.ஜி.எஃப்" படக்குழுவினர் மகிழ்ச்சியின் உச்சியில் உள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்
நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்