பட்டாசு மேல தண்ணி தெளிச்சதே அட்லிதான்... ஆடியோ லாஞ்சில் பங்கப்படுத்திய விஜய்... போட்டுடைத்த ப்ளூசட்டை மாறன்..!

Published : Oct 26, 2019, 12:47 PM ISTUpdated : Oct 26, 2019, 01:12 PM IST
பட்டாசு மேல தண்ணி தெளிச்சதே அட்லிதான்... ஆடியோ லாஞ்சில் பங்கப்படுத்திய விஜய்... போட்டுடைத்த ப்ளூசட்டை மாறன்..!

சுருக்கம்

பூக்கடையில வேலை பார்த்தவன பட்டாசுக்கடையில வேலை பார்க்க வைச்சா என்ன வேலை பார்ப்பானு ஒரு கதை சொல்லி இருந்தார் விஜய். அது அட்லிக்கு விஜய் சொன்னது என திரைப்பட விமர்சகர் ப்ளூசட்டை மாறன் விளக்கி உள்ளார்.     

பிகில் படம் பற்றி விமர்சனம் செய்துள்ள அவர், ‘’மொத்தத்துல இந்த படம் எப்படி இருக்குனா இது மாஸ் ஹீரோ படம். அத்தோட ஸ்போர்ட்ஸ் படமும் கூட. இந்தப்படத்துல மாஸ் ஹீரோக்களுக்கு இடமில்ல. ஏன்னா மாஸ்ஹீரோவுக்கு ஸ்ட்ரெய்ட்டான எந்த உருப்படியான வில்லனும் கிடையாது. எல்லாம் சப்பை வில்லனுங்க தான். ஸ்போர்ட்ஸ் ஏரியாவுல கோச்சா வர்றாரு. அந்த ஏரியாவும் சரியா ஒர்க் அவுட் ஆகல. சக்தே, டங்கல், இறுதிச்சுற்று போன்ற படங்களில் வர்ற கோச்சுகளுக்கெல்லாம் நல்ல வெயிட்டேஜ் இருக்கும். அது ரசிக்கும்படி இருக்கும். அந்த மாதிரி இந்தப்படத்துல எதுவுமே இல்ல. அதனால ஹீரோவுக்கு வேலையே இல்ல. 

ஹீரோ கேரக்டர் சுத்தமா அடிபட்டுப்போச்சு. ஸ்போர்ட்ஸ் வைச்சு படம் எடுத்தா பாதி வெற்றி பெற்று விடலாம். ஏன்னா படமே நல்லாயில்லேனாலும், படத்துல வர்றஸ்போர்ட்ஸ் சீன்களை ஆடியன்ஸ் ரசிச்சிட்டு இருப்பாங்க. அதுக்கான வேலையும் இந்தப்படத்துல இல்ல. 

படத்துல ஃபுட்பால மெயினா வைச்சு எடுத்துருக்காங்க. ஆனால் ஃபுட்பாலை பற்றி தெரிஞ்சுக்கிட்டு படம் எடுத்திருக்கலாம். ஆனால் ஃபுட்பாலை பற்றி தெரியவும் இல்ல. அதை ரிசர்ஜ்ஜும் செய்யல.  எவ்வளவு மொக்கையா எடுக்கமுடியுமோ அவ்வளவு மொக்கையா எடுத்து வைச்சிருக்காங்க. ரசிக்கும் படியாகவே எடுக்கல. 

படம் முழுக்க வீடியோகேம் பார்த்தது மாதிரியே இருக்கு. இந்தப்படத்தோட ஆடியோ லாஞ்ச்ல ஹீரோ ஒரு கதை சொல்லி இருந்தார். பூக்கடையில வேலை பார்த்தவன பட்டாசுக்கடையில வேலை பார்க்க வைச்சா என்ன வேலை பார்ப்பானு ஒரு கதை சொல்லி இருந்தார் விஜய். இந்தப்படத்தை பார்த்த பிறகு தான் தெரியுது. இந்தப்படத்தை இயக்குன அட்லியை மனசுல வைச்சு தான் அந்தக் கதையை சொல்லியிருக்காருனு இப்போ தான் புரியுது’’ என விமர்சித்துள்ளார். 

பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் யாரை எங்கே வைக்க வேண்டுமோ அவரவரை அங்கங்கே உட்கார வைக்க வேண்டும் என பேசியது அரசியல்வாதிகளை அதிருப்தியடைய வைத்தது. இதனால், அதிமுக அமைச்சர்கள் பலரும் கொதித்தெழுந்தனர். அதனை வைத்து ப்ளூசட்டை மாறன் இப்படி ஒரு விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?