
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "மாஸ்டர்". இந்த படத்தின் ஷூட்டிங் அனைத்தும் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், லாக் டவுன் நேரத்தில், மீதம் இருந்த போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அரசு அறிவித்த தளர்வு காரணமாக முழுமையாக நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
மேலும் செய்திகள்: 'பிகில்' படத்தில் விஜய் குண்டமானு கிண்டல் செய்த பாண்டியமாவா இது? சின்ன வயசுல செம்ம ஸ்லிம்! ரேர் போட்டோஸ்!
இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளதால், இரண்டு நடிகர்களின் சூப்பர் காம்போவை பார்க்க, இருதரப்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்றால் "மாஸ்டர்" திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் "மாஸ்டர்" திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு அல்லது அடுத்த வருட பொங்கலுக்கோ வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை, திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என தயாரிப்பாளரும், தளபதி விஜய்யும் தங்களுடைய முடிவில் உறுதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா... உள்ளிட்ட டாப் 7 நடிகைகள் மேக்அப் இல்லாமல் இருக்கும் புகைப்பட தொகுப்பு!
எனினும் அவ்வப்போது இந்த படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில். தற்போது வெளியாகியுள்ள தகவலில், தளபதி விஜய்க்கு மட்டும் 'மாஸ்டர் ' படத்தின் பிரத்தேயேக காட்சி போட்டு காமிக்கப்பட்டுள்ளதாம். படத்தை பார்த்த விஜய் பரம திருப்தியில், லோகேஷ் கனகராஜிக்கு அடுத்ததாக தான் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுப்பதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மேலும் செய்திகள்: ஜோதிகாவுடன் நடித்த குழந்தை நட்சத்திரம் அவந்திகா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? லேட்டஸ்ட் போட்டோஸ்
தளபதி விஜய்யின் கால் சீட் கிடைக்காதா? என பல இயக்குனர்கள் ஏங்கி வரும் நிலையில், இது லோகேஷ் கனகராஜிக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாகவே பார்க்கப்படுகிறது. எனவே விஜய்யின் 66 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, '96' புகழ் கவுரி கிஷன், மலையாள நடிகை லிண்டு ரோணி, வி.ஜே.ரம்யா என அழகு தேவதைகளும் ', சாந்தனு, தீனா, சேத்தன், சஞ்சீவ், பிரேம், ஸ்ரீநாத், பிரேம் குமார், கைதி வில்லன் அர்ஜுன் தாஸ் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.