ஸ்டைல் வாக் போட்ட விஜய்..வாரிசு சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை லீக் செய்த ரசிகர்கள்..

Published : Jul 21, 2022, 12:39 PM ISTUpdated : Jul 21, 2022, 12:59 PM IST
ஸ்டைல் வாக் போட்ட விஜய்..வாரிசு சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை லீக் செய்த ரசிகர்கள்..

சுருக்கம்

வாரிசு படப்பிடிப்பு தள வீடியோ வெளியாகி உள்ளது.  இது படக்குழுவை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில் வீட்டின் மாடியில் விஜய் ஸ்டைலாக நடந்து வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளியின் 'வாரிசு' படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை தில் ராஜு என்பவர் தயாரித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக இந்த படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஹைதராபாத், சென்னை என அடுத்தடுத்த படப்பிடிப்புகளை நடந்து வரும் இந்த படத்தில் விஜய் சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா ஹீரோயினியாக கமிட் ஆகியுள்ள இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், குஷ்பூ, யோகி பாபு என முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றன. முன்னதாக மூன்று லுக்குகள் வெளியானது. அதனுடன் வாரிசு என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் மூலம் நேரடியாக விஜய்  டோலிவுட்டுக்கு  அறிமுகம் ஆகிறார்.

மேலும் செய்திகளுக்கு..லயனுக்கும்... டைகருக்கும் பொறந்தவன் என் பையன்..! பைட்டராக மிரட்டும் விஜய் தேவரகொண்டாவின் 'லிகர்' ட்ரைலர்!


 
தற்போது ராஷ்மிகா மந்தனா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. தமன் இசையமைக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கலந்த என்டர்டைன்மென்டாக இந்த படம் உருவாகும் என ஏற்கனவே இயக்குனர் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய்க்கு ராஜேந்திரன் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் புதிய தகவலாக எஸ் ஜே சூர்யா படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என பேச்சு அடிபடுகிறது. 

மேலும் செய்திகளுக்கு..முன்னணி நடிகையை காதல் வலையில் வீழ்த்தினரா சித்தார்த்..?

இந்நிலையில் ரசிகர்கள் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர். முன்னதாக சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் ரசிகர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பட குழுவினருக்கு  தலைவலியை உண்டாக்கியது. தற்போது அது வீடியோவாக  வெளியாகி உள்ளது வாரிசு குழுவை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில் வீட்டின் மாடியில் விஜய் ஸ்டைலாக நடந்து வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..இதுக்கு பேர் ஃபேஷனா? முகம் சுழிக்க வைத்த உர்ஃபி ஜாவேத்தின் கன்றாவியான உடை! லேட்டஸ்ட் போட்டோஸ்..
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa