லயனுக்கும்... டைகருக்கும் பொறந்தவன் என் பையன்..! பைட்டராக மிரட்டும் விஜய் தேவரகொண்டாவின் 'லிகர்' ட்ரைலர்!

By manimegalai a  |  First Published Jul 21, 2022, 11:28 AM IST

நடிகர் விஜய் தேவரகொண்டா குத்து சண்டை வீரராக நடித்துள்ள 'லிகர்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது.
 


பிரபல தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா குத்துசண்டை வீரராக நடித்துள்ள திரைப்படம் 'லிகர்'.  இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத்தும் , நடிகை சார்மியும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

இதை தவிர தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது.  இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு வில்லனாக உலக புகழ்பெற்ற பாக்ஸர் மைக் டைசன் நடித்துள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் விஜய் தேவரகொண்டாவுக்கு அம்மாவாக நடித்துள்ளார். பாகுபலி படத்திற்கு பின்னர் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பு அதிகம் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவன் எப்படி குத்து சண்டை வீரனாக மாறுகிறான் என்பதையும், குத்து சண்டை வீரனாக இவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் இப்படம் பேசியுள்ளது.

மேலும் செய்திகள்: முன்னணி நடிகையை காதல் வலையில் வீழ்த்தினரா சித்தார்த்..?
 

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. ட்ரைலரின் ஆரம்பத்திலேயே லயனுக்கும் - டைகருக்கும் பொறந்தவன்... கிராஸ் பரீட் சார் என் பையன் என ரம்யா கிருஷ்ணா பேசும் போது, மாஸாக விஜய் தேவரகொண்டா என்ட்ரி கொடுக்கிறார். பின்னர் எப்படி ஒரு பைட்டராக மாறுகிறார் என்பதையும், அதற்காக இவர் செலுத்தும் கடின உழைப்பு, இவருக்குள் எப்படி காதல் வருகிறது என விறுவிறுப்பு குறையாமல் ட்ரைலரில் கூறியுள்ளார் இயக்குனர் பூரி ஜெகநாத். ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மதியின் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: இதுக்கு பேர் ஃபேஷனா? முகம் சுழிக்க வைத்த உர்ஃபி ஜாவேத்தின் கன்றாவியான உடை! லேட்டஸ்ட் போட்டோஸ்..
 

   

click me!