
* மிக மிக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் தர்பார் படமானது, ரிலீஸான முதல் ஷோவில் இருந்தே நெகடீவ் விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதன் உச்சமாக ‘நல்லவேளை நிவேதா தாமஸும், யோகிபாபுவும் படத்தை ஓரளவு காப்பாற்றியுள்ளார்கள்’ என்று கமெண்ட் அடிக்குமளவுக்கு நிலைமை போய்விட்டது. இது ஒரு புறம் இருக்க, ’வசூலில் தர்பார் வெளுத்து வாங்குகிறது’என்று தயாரிப்பு நிறுவனமான ‘லைகா’ கூறிக்கொண்டுள்ளது. பொங்கல் தொடர் விடுமுறை என்பதாலும், போட்டிக்கு பெரிய படங்கள் வரவில்லை என்பதாலும் செம்ம வசூலாம். பத்து நாட்களில் சுமார் நூறு கோடியை தாண்டிவிட்டதாம் வசூல். இதில் தமிழக கலெக்ஷன் மட்டும் அறுபது சி!யாம்.
* சமுத்திர கனிக்கு மச்சம் உச்சத்தில் இருக்குது. மிக முக்கியமான படங்களில் நல்ல கேரக்டர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறது அவருக்கு. ராஜமவுலி இயக்கும், மோஸ்ட் வாண்டட் படமான ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர், ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர். ஆக நடிக்கும் அர்விந்த்சாமியின் உதவியாளராக, அதாவது எம்.ஜி.ஆரின் உதவியாளராக நடிக்கிறாராம்.
* பிகில் படம்தான் கடந்த வருடத்தில் வசூலில் நம்பர் 1 எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் தளபதி விஜய்க்கு டபுள் பொங்கலாகிப் போனது. அவர் தனது தற்போதைய இயக்குநரான லோகேஷ் கனகராஜின் திறமையில் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் ‘மாஸ்டர்’ பட போஸ்டர்கள் ஒவ்வொன்றுமே வேறு மொழி ஹிட் படங்களின் காப்பி என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாவதால் பெரும் அப்செட்டில் இருக்கிறார். டேப் மொபைலில் இந்த விமர்சனங்களை லோகேஷிடம் காட்டி, ’என்ன நண்பா இதெல்லாம்?’ என்பது போல் கையை தூக்கினாராம். இதில் யூனிட்டே நொந்துவிட்டதாம்.
* கோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த த்ரிஷாவுக்கு திடீர் சரிவு உண்டானது. அந்த நிலையில் 96 படம் அவருக்கு பெரும் செல்வாக்கினை தேடி தந்தது. இந்த நிலையில் அந்த பிளாக்பஸ்டர் மூவியானது இப்போது தெலுங்கில் ‘ஜானு’ எனும் தலைப்பில் ரீமேக் ஆகியிருக்கிறது. அதே போல் இப்படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் பெயரான ‘ராம்’ பெயரில் மலையாளத்தில் ஒரு படம் உருவாகிறது. மோகன்லால் நடிக்க, ஜீத்து ஜோசப் இயக்கும் இப்படத்தில் த்ரிஷாவும் இருக்கிறார் பிரதானமாக.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.