
'இறுதிச்சுற்று' புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'சூரரைப் போற்று'. ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில், மாறா என்ற கேரக்டரில் சூர்யா நடிக்கிறார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதையும் படிங்க: சமந்தாவின் "சூப்பர் டீலக்ஸ்" படம் எப்படி?... மருமகள் நடிப்பு குறித்து மாமியார் அமலா கொடுத்த கமெண்ட்...!
படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் அசத்தலான வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரும் சோசியல் மீடியாவில் வைரலாகி, தாறுமாறாக லைக்குகளை குவித்தது.
இந்நிலையில் சூர்யா தனது சொந்த குரலில் தெலுங்கு மற்றும் தமிழில் பாடியுள்ள மாறா தீம் பாடல் தயாராகிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார். மேலும் இந்த தீம் பாடல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.