
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, தெலுங்கில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' ரீமேக்கான 'ஏ மாய சேஸாவே' படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். அந்தப் படத்திலிருந்தே காதலித்து வந்த இருவரும், கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா, தமிழில் "சூப்பர் டீலக்ஸ்" படம் மூலம் அதிரடி கம்பேக் கொடுத்தார். பெரிய இடத்து மருமகளாக இருக்கும் சமந்தா, தனக்கு சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பில் அசத்தி வருகிறார். மேலும் சில சமயங்களில் சமந்தாவிற்கும், சைதன்யா குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகிவந்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றிற்கு பதிலளித்த அமலா, அவரது மருமகள் சமந்தா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சமந்தா மிகவும் திறமையானவர் என்றும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவரது கதாபாத்திரத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சமந்தாவின் ஆடை மற்றும் பட விவகாரம் நாகார்ஜுனா குடும்பத்தில் புயலை கிளப்பியுள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது மாமியாரான அமலாவின் இந்த பதில் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.