சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், பிரபலமானவர்களின் ஒருவர் புதுச்சேரியை சேர்ந்த சாய் சரண். இவருக்கு இந்த லாக் டவுன் நேரத்தில் மிகவும் எளிமையாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடித்துள்ளது. இந்த தம்பதியின் புகைப்படம் தற்போது வெளியாக, ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை இவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

பல திறமையாளர்களை பின்னணி பாடகர்களான திரைத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்துள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று, சூப்பர் சிங்கர். இதில் போட்டியாளர்களாக நுழைந்து பலர் முன்னணி பாடகர்களான உள்ளனர்.
அந்த வகையில், தன்னுடைய இனிமையான குரலால், ரசிகர்களை ஈர்த்து, இன்று பின்னணி பாடகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் சாய் சரண். ஜூனியர் - சீனியர் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டு பல பாடல்களை பாடியுள்ளார்.
இசையமைப்பாளர் டி.இமான் இசையில் பல படங்களில் பின்னணி பாடல்களும் பாடியுள்ளார். இந்நிலையில், இவருக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய நண்பர்கள் மற்றும், குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாக பலர் இந்த தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய வருங்கால மனைவியுடன் புகைப்படம் பதிவிட்டு engaged என தெரிவித்துள்ளார் சாய் சரண்.