டாப் 6 இடங்களை ஆக்கிரமித்த சன் டிவி...சீரியல்களை காப்பாற்றுமா விஜய் டிவி ?

Published : Sep 09, 2022, 03:09 PM ISTUpdated : Sep 09, 2022, 03:11 PM IST
டாப் 6 இடங்களை ஆக்கிரமித்த சன் டிவி...சீரியல்களை காப்பாற்றுமா விஜய் டிவி ?

சுருக்கம்

இந்த சீரியல்களில் மேலும் சுவாரஸ்சியத்தை கூட்ட அவர்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது

வெள்ளித்திரையை விட சின்னத்திரைக்கே ரசிகர்கள் அதிகம் முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்து  வந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் இளைய தலைமுறை கூட சீரியல்களுக்கு அதிக ரசிகர்களாகவே உள்ளனர். இதில் சன் டிவி, விஜய் டிவி இரண்டிற்கும் தான் போட்டி அதிகம்.  இந்த இரண்டு சேனல்களிலும் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பலவும் பிரபலமானவையாகவே உள்ளன. அதோடு அதில் நடிக்கும் நடிகர்களுக்கும் நட்சத்திர அந்தஸ்து கிடைப்பது வழக்கமாகிவிட்டது. அதோடு ஒவ்வொரு வாரமும் சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு டிஆர்பியும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள டிஆர்பி லிஸ்டில் சன் டிவி சீரியல்கள் தான் விஜய் டிவி சீரியல்களை விட அதிக பார்வையாளர்களைப் பெற்று முந்தைய ஆறு இடங்களை பிடித்துள்ளது. அதன்படி கயல் சீரியலுக்கு முதலிடம், சுந்தரி சீரியலுக்கு இரண்டாவது இடம், வானத்தைப்போல சீரியலுக்கு மூன்றாவது இடம், கண்ணான கண்ணே சீரியலுக்கு நான்காவது இடம், ரோஜா சீரியலுக்கு ஐந்தாவது இடம், எதிர்நீச்சல் சீரியலுக்கு ஆறாவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...இதற்காக தான் பாரதிகண்ணம்மாவில் இருந்து விலகினேன்... பல நாள்கழித்து உண்மையை உடைத்த அஞ்சலி

ஆனால் முன்னதாக முதல் இடங்களை ஆக்கிரமித்து வந்த விஜய் டிவியின் பிரபல சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி உள்ளிட்டவை தற்போது பின் தங்கியுள்ளது. பாக்கியலட்சுமிக்கு ஏழாவது இடமும் பாரதிகண்ணம்மாவிற்கு எட்டாவது இடமும், பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு ஒன்பதாவது இடமும், ராஜா ராணி 2 விற்கு பத்தாவது இடம் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் விஜய் டிவி சீரியல் டீம் மிகவும் சோகத்தில் உள்ளனர். அதற்காக இந்த சீரியல்களில் மேலும் சுவாரஸ்சியத்தை கூட்ட அவர்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாகவே ராஜா ராணி சீரியலில் ஆதிக்கு கலப்பு திருமணம், பாரதி கண்ணம்மாவில் தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு,  பாக்கியலட்சுமியில் புது ஆர்டரை பிடிக்க முயல்வது, பாண்டியன் ஸ்டோர்ஸில் வீடு விற்பது என சிறிது சிறிதாக ஆர்வத்தை தூண்டி வருகிறது விஜய் டிவி. தற்போது வெளியாகியுள்ள டி ஆர் பி விஜய் டிவி சீரியல்களின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...ஜெனியும் இப்படி பண்ணிட்டாங்களே ... போட்டியில் ஜெயிப்பாரா பாக்கியா? பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தோல்விப் படத்தால் கிடைத்த காதல்; நயன்தாராவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த க்ரிஷ்ணா வம்சி!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! நவரச நாயகன் கார்த்திக் உடல்நலம் குறித்த சமீபத்திய தகவல்!