ஜெனியும் இப்படி பண்ணிட்டாங்களே ... போட்டியில் ஜெயிப்பாரா பாக்கியா? பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..

By Kanmani P  |  First Published Sep 9, 2022, 12:43 PM IST

பாக்கியலட்சுமி அனைவரின் முன்னிலையும்  முதல் அடியிலேயே அவமானப்பட்டு நிற்கிறார்.


முந்தைய எபிசோட்களில் பாக்கியாவிற்கு தெரியாமல் இனியா அவரது தந்தை கோபியுடன் வெளியில் சென்று விடுகிறாள். மகளை காணாமல் தவித்துப் போகும் பாக்கியா பள்ளிக்கு சென்று மகள் குறித்து கேட்டபோது அங்குள்ள வாட்ச்மேன் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிவிக்கிறார். இதனால் பயந்து போன பாக்கியலட்சுமி வரும் வழியாக எல்லாம் இனியா வருகிறாளா? என பார்த்தபடியே புலம்பிக்கொண்டே வீடு திரும்புகிறார். வழக்கம் போல மாமியார் உட்பட அனைவரும் இனியா தொலைந்து போனதற்கு பாக்யா தான் காரணம் என மிகவும் வன்மையாக பேசுகிறார்கள். அதை அடுத்து ஜெனியிடம் இருவரும் சென்று போலீசில் புகார் அளிக்கலாம் என பேசிக் கொண்டிருக்கிறார் பாக்கியா. ஆனால் இனியா கோபியுடன் தான் சென்றுள்ளார் என்பது செழியன், லட்சுமி இருவருக்குமே தெரியும் ஆனால் இது குறித்து மூச்சு கூட விடாமல் இருவரும் மௌனம் சாதிக்கிறார்கள். அந்த நேரத்தில் கோபியுடன் வந்து இறங்குகிறாள் இனியா. 

மேலும் செய்திகளுக்கு....மருதநாயகம் தொடக்கவிழா... இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது - ராணி எலிசபெத் மறைவுக்கு கமல் இரங்கல்

Latest Videos

இதை தொடர்ந்து நேற்றைய எபிசோடில் பெற்ற தந்தைகையை இனியா திருட்டுத்தனமாக பார்ப்பதற்கு நீ தான் காரணம் எனத் திட்டுகிறார் மாமியார் லட்சுமி. பின்னர் கேட்டரிங் ஆர்டருக்கான அழைப்பு பாக்யாவிற்கு வருகிறது. இதையடுத்து இன்று  எழில் தைரியம் கூறி அந்த இன்டர்வியூக்கு பாக்கியாவை அழைத்து செல்கிறார். ஆனால் மாமியார் உட்பட மற்றவர்கள் பாக்கிய இதில் அசிங்கப்பட்டு தான் திரும்புவார் என்பது போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின்னர் இன்டர்வியூ சென்ற இடத்தில் அங்குள்ளவர்களை பார்த்து சற்று குழப்பம் அடைகிறார் பாக்கியா.  அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா பாத்துக்கலாம் அப்படின்னு சொல்லி அனுப்பி வைக்கிறார் எழில். இதுதாண்டா என்னோட முதல் இன்டர்வியூ என கூறிக்கொண்டே கொண்டே செல்கிறார் பாக்யா.

இதையும் படியுங்கள்... Kohinoor Crown : ராணி எலிசபெத்தின் வைர கிரீடத்தை அணியப் போகிறவர் யார்?

இதையும் படியுங்கள்... Queen Elizabeth: ராணி எலிசபெத் மறைவு!10 நாள் துக்கம் அனுசரிப்பு.. 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி.!

அங்கு சென்று பார்த்தல் மிகவும் பிரபலமான கேட்டரிங்கை சேர்ந்த பலரும் அங்கு இருக்கிறார்கள். அதோடு இன்டர்வியூ செய்பவர் நீங்கள் இன்டர்வியூவுக்கா வந்திருக்கிறீர்கள்? என சந்தேகமாக கேட்கிறார். ஆமாம் என்னும் பாக்கியா, எனக்கு அழைப்பு வந்தது அதனால் தான் வந்தேன் என்கிறார். இதை தொடர்ந்து நீங்கள் உங்கள் பயோடேட்டாவை கொடுங்கள் என கேட்கிறாய் இன்டர்வியூ செய்பவர். உடனே பாக்யா பயோடேட்டானா என்ன என கேட்க அனைவரும் சிரிக்கிறார்கள். உடனே ஜெனிக்கு போன் செய்து பயோடேட்டா கேட்கிறார்கள் என கூறுகிறார் பாக்கியலட்சுமி. அய்யய்யோ ஆண்டி நான் அதை மறந்துட்டேன் என கூறுகிறார். இவ்வாறு பாக்கியலட்சுமி அனைவரின் முன்னிலையும்  முதல் அடியிலேயே அவமானப்பட்டு நிற்கிறார். சிறிது நேரம் கழித்து 15 நிமிடம் தான் கொடுக்கப்படும் அதற்குள் நாங்கள் கொடுக்கும் பொருட்களை வைத்து டிஸ்  செய்து கொடுக்க வேண்டும் என கூறுகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. 

click me!