இன்று ஆரம்பமாகிறது பிக்பாஸ் சீசன் 4... வெளியானது புதிய புரோமோ வீடியோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Oct 04, 2020, 11:28 AM IST
இன்று ஆரம்பமாகிறது பிக்பாஸ் சீசன் 4... வெளியானது புதிய புரோமோ வீடியோ...!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையிலும், ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக புரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய கடைசி மூன்று பிக்பாஸ் சீசன்கள் நல்ல படியாக முடிவடைந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவர்கள் பற்றி, நிகழ்ச்சியாளர் தரப்பில் இருந்து ரகசியம் காத்து வருவதால், தினம் தோறும் பல தகவல்கள் வெளியாகி வருகிறது.

 

இதையும் படிங்க: செம்ம அழகு... மகன், மகளின் புகைப்படங்களை வெளியிட்ட சினேகா - பிரசன்னா...!

பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்பதற்காக அனு மோகன், ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆஜீத் காலிக், ரம்யா பாண்டியன், விஜே அர்ச்சனா, ஷிவானி நாராயணன், கேப்ரியலா சார்ல்டன், சனம் ஷெட்டி  ஆகியோர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகை காயத்ரி  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்த்த நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதை ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.

 

இதையும் படிங்க: ஜாக்கெட் போட மறந்துட்டீங்களா?... சேலையில் சாக்‌ஷி வெளியிட்ட போட்டோக்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையிலும், ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக புரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.  சற்று நேரத்திற்கு முன்பு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான புதிய புரோமோ வெளியாகியுள்ளது. அதில் முழு பிக்பாஸ் அரங்கமும் காண்பிக்கப்படுகிறது. அதில் தோன்றும் கமல் ஹாசன் இன்று மாலை 6 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளதை அறிவிக்கிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!