ஜூன் 17 முதல் அதிரடி ஆரம்பம்... புதுசு புதுசாய் அறிவிப்புகளை வெளியிட்ட விஜய் டி.வி....!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 15, 2020, 06:25 PM IST
ஜூன் 17 முதல் அதிரடி ஆரம்பம்... புதுசு புதுசாய் அறிவிப்புகளை வெளியிட்ட விஜய் டி.வி....!

சுருக்கம்

இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனம் கவர்ந்த  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”,  “பாரதி கண்ணம்மா” சீரியல்களின் படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.


கொரோனா பிரச்சனை காரணமாக மார்ச் 22ம் தேதி முதலே சின்னத்திரை, வெள்ளித்திரை உட்பட அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் தொலைக்காட்சிகளின் டி.ஆர்.பி. சரிய ஆரம்பித்தது. வீட்டில் முடங்கி கிடக்கும் இல்லத்தரசிகளும் தனது பேவரைட் சீரியலில் அடுத்த எபிசோட்டை பார்க்க முடியவில்லையே என கவலைப்பட்டனர். 

இதையும் படிங்க:  பெண் மேனேஜர், சுஷாந்த் தற்கொலைகளுக்கிடையே தொடர்பா?... தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார்...!

சீரியலில் சினிமாவை போல் இந்த வாரம் இல்லை என்றால், அடுத்த வாரம் ரிலீஸ் என்று அறிவிக்கும் வாய்ப்பே இல்லை. எப்போதும் குறிப்பிட்ட நாட்களுக்கு தேவையான காட்சிகளை மட்டுமே ஷூட் செய்து வைத்திருப்பார்கள். ஏற்கனவே ஷூட் செய்து, போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்த சீரியல்கள் அனைத்தும் ஒளிபரப்பாகிவிட்டன. கையில் ஒன்றுமில்லையே என வாடி நின்ற தொலைக்காட்சிகள் பலவும், ஏற்கனவே ஒளிபரப்பான சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்த எபிசோட்டை திரும்ப ஒளிபரப்புவது, பழைய ரியாலிட்டி ஷோக்களை தூசி தட்டி போடுவது என்று ரசிகர்களை பொழுது போக்கி வந்தன. 

இதையும் படிங்க: சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் போட்டோவில் இதை கவனித்தீர்களா?... தீயாய் பரவும் புகைப்படம்...!

இந்நிலையில் 72 நாட்களுக்கு பிறகு சீரியல் ஷூட்டிங்குகளை மட்டும் நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது. அரங்குகள் மற்றும் வீடுகளில் மட்டுமே சீரியல் படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கிய அரசு, கூடவே ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது. இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனம் கவர்ந்த  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”,  “பாரதி கண்ணம்மா” சீரியல்களின் படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் புதன்கிழமை இரவு 8 மணிக்கு  “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரின் புதிய எபிசோட்டையும், 8.30 மணி முதல் “பாரதி கண்ணம்மா” தொடரின் புதிய எபிசோட்டையும் காணலாம் என விஜய் டி.வி. நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஹாட் பிகினியில் அமலா பால் ... அப்படியொரு போஸில் ரசிகர்களிடம் கேட்ட அதிரடி கேள்வி...!

இதை தவிர வரும் புதன்கிழமை மாலை 7 மணி முதல் முதல்  “ஆயுத எழுத்து", இரவு 10 மணி முதல்  “காற்றின் மொழி" ஆகிய சீரியல்களும் புதிய எபிசோடுகளுடன் ஒளிபரப்பாக உள்ளன. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி