சின்ன வயசிலேயே பெண் வேடம் போட்ட விஜய்... இணையத்தையே தெறிக்கவிடும் வைரல் போட்டோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 15, 2020, 05:46 PM ISTUpdated : Jun 15, 2020, 05:54 PM IST
சின்ன வயசிலேயே பெண் வேடம் போட்ட விஜய்... இணையத்தையே தெறிக்கவிடும் வைரல் போட்டோ...!

சுருக்கம்

இதனிடையே யாரும் இதுவரை பார்த்திடாத விஜய்யின் சின்ன வயசு புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார் தளபதி விஜய். தமிழ்நாட்டை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என ஆல் ஓவர் தென்னகமும் தளபதி ஃபேன்ஸ் ஆதிக்கம் தான். கடைசியாக லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த "மாஸ்டர்" பட ஷூட்டிங்கே அதற்கு சாட்சி. கர்நாடகாவில் உள்ள சிவமோகாவில் ஷூட்டிங் நடந்த ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தளபதியை காண ஓட்டல் வாசலில் தவம் கிடந்தனர். மாலை மரியாதை என்று ஒட்டுமொத்த கர்நாடகாவே அதிரும் அளவிற்கு வரவேற்பு கொடுத்து அசத்தினர். அதேபோல் நெய்வேலியில் ஷூட்டிங் நடந்த போதும் தமிழக ரசிகர்கள் வேற லெவலுக்கு மாஸ் காட்டினர். 

பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுடன் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட மாஸ்டர் செல்ஃபி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. வரும் 22ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் வர உள்ளது. கொரோனாவால் மக்கள் துன்பத்தில் இருக்கும் இந்த சமயத்தில் பிறந்தநாளை கொண்டாட வேண்டாமென விஜய், தனது ரசிகர் மன்றங்களுக்கு கட்டளை போட்டுள்ளார். அதனால் சோசியல் மீடியாவிலாவது கொண்டாட வேண்டும் என முடிவு செய்த தளபதி ரசிகர்கள் நாள்தோறும் புதுப்புது விஷயங்களை செய்து வருகின்றனர். 

இதையும் படிங்க:  சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் போட்டோவில் இதை கவனித்தீர்களா?... தீயாய் பரவும் புகைப்படம்...!

இந்நிலையில் தளபதி விஜய் சின்ன வயசில் பெண் வேடமிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவை விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு முன்னதாக 2000ம் ஆண்டு நடிகர் விஜய், சிம்ரனுடன் நடித்த "பிரியமானவளே" படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் பெண் வேடமிட்டு நடித்தார். அதற்கு அடுத்து “வேட்டைக்காரன்” படத்தில் கூட ஒரு பாட்டில் பெண் வேடத்தில் தோன்றி செம்ம ஆட்டம் போட்டிருப்பார். 

இதையும் படிங்க: ஹாட் பிகினியில் அமலா பால் ... அப்படியொரு போஸில் ரசிகர்களிடம் கேட்ட அதிரடி கேள்வி...!

இதனிடையே யாரும் இதுவரை பார்த்திடாத விஜய்யின் சின்ன வயசு புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்ன வயதில் நெற்றில் பொட்டு, கையில் வளையல் அணிந்து புடவையில் செம்ம அழகாக இருக்கும் விஜய்யின் புகைப்படம் தான் அது. லைட் மேக்கப்புடன் கொஞ்சம் வெட்கத்துடன் தளபதி விஜய் மேடையில் நிற்பது போன்ற இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் நடிகை தற்கொலைக்கான காரணம் என்ன? பின்னணியில் திடுக்கிடும் தகவல்!
அரோரா போட்ட கேஸில் ஆடிப்போன பாரு ! அடித்து ஓட விட்ட விக்ரம்!