விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை..! சீட் பெல்ட் போட்டதால் தப்பித்தேன்! காயங்களுடன் வெளியிட்ட வீடியோ!

By manimegalai a  |  First Published Aug 18, 2023, 4:36 PM IST

விஜய் டிவி சீரியல் நடிகை வைஷாலி விபத்தில் சிக்கிய தகவலை தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
 



விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'முத்தழகு' சீரியலில்... அஞ்சலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷாலி. கிட்ட தட்ட இரண்டாவது ஹீரோயினாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து, சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ஆனந்த ராகம் சீரியலிலும், அழகு சுந்தரத்தின் மாமன் மகள் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வைஷாலி.

சீரியல்கள் மட்டும் இன்றி, சில திரைப்படங்களிலும் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நேர்ந்த விபத்து குறித்து பேசி வெளியிட்டுள்ள வீடியோ அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

Tap to resize

Latest Videos

எத்தனை கிரிமினல் கூடத்தான் வாழறது! ஜீவனந்தத்தை தீர்த்து கட்ட ஆளை அனுப்பிட்டு அலப்பறை பண்ணும் குணசேகரன்!

வைஷாலி வெளியிட்டுள்ள வீடியோவில், நான் தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த போது... டிரைவர் பேரி கார்டு உள்ளதை கவனிக்காமல் திரும்பிவிட்டார். இதனால் நான் சென்ற கார் ஒரு விபத்தில் சிக்கியது. அதில் எனக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. ஒரு வேலை சீட் பெல்ட் மற்றும் ஏர் பேக் இல்லாமல் போயிருந்தால், மிகப்பெரிய விபத்தாக இருந்திருக்கும். எனவே நீங்களும் சாலையில் செல்லும் போது மிகவும் கவனமாக பார்த்து செல்லுங்கள். கண்டிப்பாக சீட் பெல்ட் அணியுங்கள் என தெரிவித்துளளார். 

பேர்.. புகழுக்கு அடுத்தவர்கள் வாய்ப்பில் மண்ணை போடும் அதிதி ஷங்கர்! மன உளைச்சலில் கதறி அழும் பாடகியால் சர்ச்சை

இந்த விபத்தால் தன்னுடைய கழுத்தில் ஏற்பட்ட காயமும், ஒரு பக்கம் சுளுக்கும் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள வைஷாலி, இந்த விபத்து குறித்து அறிந்து தன்னை பற்றி அக்கறையுடன் நலம் விசாரித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

click me!