விஜய் டிவியில் விரைவில் முடிவுக்கு வரப்போகும் பிரபல சீரியல்... ரசிகர்கள் அதிர்ச்சி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 10, 2021, 10:59 AM ISTUpdated : Aug 10, 2021, 11:00 AM IST
விஜய் டிவியில் விரைவில் முடிவுக்கு வரப்போகும் பிரபல சீரியல்... ரசிகர்கள் அதிர்ச்சி...!

சுருக்கம்

இப்படியிருக்க விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான ஈரமான ரோஜாவே சீரியல் விரைவில் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள், விதவிதமான சீரியல்கள் என விஜய் தொலைக்காட்சி என்போதும் தனி ட்ரெண்டிங்கை பாலோப் செய்து, ரசிகர்கள் மனதில் நச்சென இடம் பிடித்துள்ளது. பிக்பாஸ், சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி என நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் பின்னி பெடலெடுத்தால், மற்றொரு பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, மெளன ராகம் பார்ட் 2 என பல சீரியல்கள் இல்லத்தரசிகளை மட்டுமல்லாது ஆண்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

இப்படியிருக்க விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான ஈரமான ரோஜாவே சீரியல் விரைவில் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே விஜய் டிவி-யில் பல புது சீரியல்கள் துவங்க உள்ளதை வெளிப்படுத்தும் ப்ரமோ வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தான் தமிழும் சரஸ்வதியும் என்ற புதிய சீரியல் தொடங்கப்பட்டது. இதனையடுத்து 2018ம் ஆண்டு முதலே ஒளிபரப்பாகி வரும்  ஈரமான ரோஜாவே சீரியலுக்கு என்ட் கார்டு போட முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவலை ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலாண்டேஸ்வரி கேரக்டரில் நடிக்கும் நடிகை சாய் காயத்திரி சோஷியல் மீடியா மூலம் வெளிப்படுத்தி உள்ளார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாய் காயத்ரி சமீபத்தில் இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார். இந்த ஒரே போஸ்ட்டில் 2 ஃபோட்டோ மற்றும் ஒரு வீடியோவை இணைத்துள்ள அவர்,  "அனைத்தும் முடிந்தது.... இன்று, ஈரமான ரோஜா ஷூட்டிங்கின் கடைசி நாள். எனது குழுவினருடன், உங்களை எல்லாம் மிகவும் நேசிக்கிறேன் மற்றும் உங்களை மிஸ் செய்ய போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வருவது உறுதியாகியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!