சத்யா சீரியல் தயாரிப்பாளர் திடீர் மரணம்!! காரணம் இதுவா? உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Published : Aug 10, 2021, 10:57 AM IST
சத்யா சீரியல் தயாரிப்பாளர் திடீர் மரணம்!! காரணம் இதுவா? உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

சுருக்கம்

சீரியல்கள் என்றாலே இல்லத்தரசிகளின் மனதை மிகவும் கவர்ந்தது. அதிலும் குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு, மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி-யை, தொடர்ந்து சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் ஒவ்வொரு முறையும் கெத்து காட்டி வருகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி.  

சீரியல்கள் என்றாலே இல்லத்தரசிகளின் மனதை மிகவும் கவர்ந்தது. அதிலும் குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு, மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி-யை, தொடர்ந்து சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் ஒவ்வொரு முறையும் கெத்து காட்டி வருகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி.

இதில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதையும், இல்லத்தரசிகளின் மனதையும் அதிகப்படியாக கவர்ந்துள்ளது. அந்த வகையில் நீதானே என் பொன்வசந்தம், யாரடி நீ மோகினி, செம்பருத்தி, திருமதி ஹிட்லர், சத்யா, பூவே பூச்சூடவா, என சொல்லிக்கொண்டே போகலாம்....

குறிப்பாக 'சத்யா' சீரியலில் நடிகை ஆயிஷாவின் வித்தியாசமான கெட்டப் மற்றும் அவரது பேச்சு ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்று மனதில் பதிந்துள்ளது. இதற்காகவே இந்த சீரியலை விரும்பி பார்க்கும் பலர் உள்ளனர். காதல், காமெடி, சென்டிமெண்ட், என நகர்ந்து செல்லும் இந்த சீரியலில் எதிர்பாராத பல திருப்புமுனைகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் தயாரிப்பாளர் ஆர்.கே.மனோகர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சீரியல் வட்டாரத்தில் நாம் விசாரிக்கையில், ஆர்.கே.மனோகர் அவர்களின் மனைவிக்கு மார்பக புற்றுநோய் சிகிச்சை பட்டுக்கோட்டையில் நடந்து வருவதாகவும், அதனால் அவரை பார்த்து விட்டு கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு தனது சைலோ காரில் டிரைவருடன் கிளம்பியுள்ளார். திருச்சி அருகே இவர்கள் வந்தபோது சிறிய விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் இவரது கார் நசுங்கியதாலும், ட்ரைவர் சடன் பிரேக் போட்டதாலும் சில காயங்கள் ஏற்பட்டது. தலையிலும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இவரும் பட்டுக்கோட்டை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இவர் பிபி, சர்க்கரை நோய் போன்ற இணைநோயாலும் அவதி பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிறு காலை திடீர் என மரணம்.ஆர்.கே.மனோகர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சீரியல் வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலர் ஆர்.கே.மனோகர் அவர்களுக்கு தங்களுடைய இரங்கலை சமூக வலைதளம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!