‘வணங்காமுடி’-யால் வலுக்கும் எதிர்ப்பு... சிம்புவை அடுத்து சிக்கலில் மாட்டிய அரவிந்த சாமி படம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 9, 2021, 8:19 PM IST
Highlights

தற்போது அதேபோல் தலைப்பு சிக்கலில் முன்னணி நடிகரான அரவிந்த சாமியின் படமும் சிக்கியுள்ளது.

ஐசரி கணேசன்‌ தயாரிப்பில் கெளதம்  மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’ இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்காக சிம்பு 15 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்தற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் இதே பெயரில் இலங்கை தமிழர்கள் குறித்து படமெடுக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் இருப்பதாக எழுத்தாளர் கவிதா பாரதி கூறியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

இதே தலைப்பில் சிம்பு படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதால், மதிக்கு OTT தளத்தில் படத்தை விற்பதில் சிக்கல் நேர்ந்துள்ளது என்றும்,  மதிசுதாவின் படம் குறித்த தகவல் உங்களுக்குத் தெரியாமலிருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ள கவிதா பாரதி, உங்கள்மீது குற்றம் சுமத்தவில்லை, வேண்டுகோள் விடுக்கிறோம்.  அறியாமல்கூட யானையின் காலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழந்துவிடக்கூடாது. ஒரு எளிய கலைஞனை அங்கீகரித்து பெருந்தன்மையோடு உங்கள் தலைப்பை மாற்றிக் கொண்டால் வரலாறு என கோரிக்கை வைத்துள்ளார். 

தற்போது அதேபோல் தலைப்பு சிக்கலில் முன்னணி நடிகரான அரவிந்த சாமியின் படமும் சிக்கியுள்ளது. ‘நான் அவன் இல்லை', 'குரு என் ஆளு' ஆகிய படங்களை இயக்கிய செல்வாவின் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடித்திருக்கும் 'வணங்காமுடி' படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியானது. அன்றிலிருந்தே சிக்கலும் வெடித்துவிட்டது. 1957-ல் வெளியான படம். சிவாஜி கணேசன், சாவித்திரி, எம்.என்.நம்பியார், கே.ஏ.தங்கவேலு உள்ளிட்டோர் நடிப்பில், ஏ.கே.பாலசுப்ரமணியம் தயாரித்த திரைப்படம் வணங்காமுடி. முறையான அனுமதி பெறாமல் தன்னுடைய தந்தை தயாரித்த படத்தின் தலைப்பை பயன்படுத்தி இருப்பதாகவும், இதற்காக சட்டப்போராட்டம் நடத்தவும் தயார் என்றும் ஏ.கே.பாலசுப்ரமணியம் மகன் மோகன் குமார் தெரிவித்துள்ளார். 

click me!