
தமிழகத்தில் பட்டிமன்ற பேச்சாளராக மிகவும் பிரபலமானவர் திண்டுக்கல் ஐ.லியோனி. தன்னுடைய கலகலப்பான பேச்சால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த லியோனி, 1997ம் ஆண்டு வெளியான கங்கா கெளரி திரைப்படத்தில் அப்பா கேரக்டரில் நடித்திருந்தார். திமுக பேச்சாளரான திண்டுக்கல் லியோனி, தற்போது அரசு பாடநூல் கழக தலைவராக பொறுப்பேற்று பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
மற்றொருபுறம் திண்டுக்கல் லியோனியின் மகனும் திரையுலகில் கால்பதித்துள்ளார். அப்பாவை தொடர்ந்து திண்டுக்கல் லியோனியின் மகனான லியோ சிவக்குமார் ஹீரோவாக நடிக்க உள்ள ‘அழகிய கண்ணே’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.சீனு ராமசாமியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஜயகுமார் என்பவர் இயக்க உள்ள அழகிய கண்ணே படத்தை, தளபதி விஜய்யின் நெருங்கிய உறவினரும், மாஸ்டர் பட தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். மாஸ்டர் படத்தின் மூலம் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பழக்கம் மற்றும் சீனு ராமசாமியின் உதவி இயக்குநர் படம் என்பதால் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கல்லூரி பேராசிரியராக வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.