மகனின் திருமணத்தை நிறுத்த புறப்பட்ட தந்தை.. மணமகன் கோபி என அறிந்து ஷாக்காகவும் பாக்யா : இன்றைய எபிசோட்

Published : Sep 26, 2022, 04:51 PM ISTUpdated : Sep 26, 2022, 05:35 PM IST
மகனின் திருமணத்தை நிறுத்த புறப்பட்ட தந்தை.. மணமகன் கோபி என அறிந்து ஷாக்காகவும் பாக்யா :  இன்றைய எபிசோட்

சுருக்கம்

ஒரு வழியாக தட்டு தடுமாறி கோபிநாத் என எழுதி இருப்பதை படித்துவிட்டு ஷாக் ஆகிறார் பாக்கியலட்சுமி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபி - ராதிகாவின்  இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது. அவர்களது திருமணத்திற்கு பாக்கியலட்சுமி தான் கேட்டரிங் ஆர்டர் எடுத்துள்ளார். இதற்கிடையே கோபியின் தாய் பலவாறு மகனிடம் எடுத்துக்கூறியும் அவர் மறுத்து திருமணத்தில் உறுதியாக உள்ளார். இதை அடுத்து கோபியின் தந்தை திருமணத்தை நிறுத்தியே தீர வேண்டும் என முன்னதாக கோபியிடம் வாக்குவாதம் செய்தார். அதில் எந்த பலனும் இல்லை என்பதால், ராதிகாவின் வீட்டிற்கு சென்று சண்டையிட திட்டமிட்டுள்ளார்.

இன்றைய எபிசோடில்  இதை அறிந்த ராதிகா வீட்டார் கோபியிடம் உங்கள் தந்தை வீட்டிற்கு வந்து சண்டையிடுவார் . அதனால் அவர் வரும் போது நாம் யார் வீட்டில் இருக்க கூடாது.  அனைவரும் கிளம்பி மண்டபத்திற்கு சென்று விட வேண்டும். என பிளான் செய்கின்றனர்.

என் குழந்தைக்கு பாரதி தான் அப்பா..புது குண்டை போடும் வெண்பா...என்னங்க டுவிஸ்ட் இது?

மறுபுறம் ஜெனி, செல்வி, பாக்யா மூவரும் மண்டபத்திற்கு டூ வீலரில் கிளம்புகின்றனர். அந்த நேரத்தில் போலீசாரிடம் அவர்கள் சிக்கி கொள்கின்றனர். பின்னர் ஜெனி ஆபிஸுக்கு கிளம்பும் போது மயக்கமிட்டு விருந்ததால் மூவரும் மருத்துவமனைக்கு செல்வதாக பாக்கியா கூறி சமாளித்து மண்டபத்திற்கு புறப்படுகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...குடும்பத்துடன் செல்ல மகனின் பிறந்த நாளை கொண்டாடிய ரம்பா..

அங்கு கிச்சனுக்கு சென்று சமைக்க முற்படுகைகள் செழியன் ஜெனிக்கு போன் செய்து உடனடியாக நீ கிளம்பி வர வேண்டும் என சண்டையிடுகிறார். பின்னர் ஜெனியை செல்வியுடன் அனுப்பி வைக்கிறார் பாக்யா. தொடர்ந்து மணமக்கள் பேனரில் இடம் பெற்றுள்ள ஆங்கில பெயரை படிக்க முயற்சிக்கிறார் பாக்யா. ஒரு வழியாக தட்டு தடுமாறி கோபிநாத் என எழுதி இருப்பதை படித்துவிட்டு ஷாக் ஆகிறார் பாக்கியலட்சுமி. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்