'சந்திரமுகி 2' படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

By manimegalai a  |  First Published Sep 26, 2022, 4:00 PM IST

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும், 'சந்திரமுகி 2' படத்தின் ஓடிடி உரிமையை, பிரபல முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 25 ஆம் ஆண்டு வெளியாகி சுமார் 500 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூல் சாதனை செய்த திரைப்படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கி இருந்த இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், மாளவிகா, வினீத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: பிகினி உடையில்... அந்த இடத்தில் ஓபன் வைத்து கிக் ஏற்றும் அமலா பால்! சன்னி லியோனுக்கே டஃப் கொடுப்பாங்க போல!
 

முதல் பாகத்தை தொடர்ந்து, தற்போது இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த சில வருடங்களாகவே இயக்க பி வாசு முயற்சி செய்து வருகிறார். முதலில் இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்க முயற்சி செய்த நிலையில், பின்னர் ஒரு சில காரணங்களால்... அவர் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து இந்த வாய்ப்பு நடிகர் ராகவா லாரன்ஸுக்கு சென்றது. பின்னர் இந்த படத்தில் நடிப்பதை லாரன்ஸ் உறுதி செய்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

  

மேலும் செய்திகள்: STR என தன்னையே கூறிக்கொண்டு... மன்மதனாக மாறிய கூல் சுரேஷ்! நடிகையின் தொடையை பிடித்தபடி வெளியான புகைப்படம்!
 

லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு பாகுபலி பட இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் 50 சதவீதம் கூட இன்னும் முடிவடையாத நிலையில், இந்த படத்தின் ஓடிடி உரிமை தற்போது பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது. இது வெளியாகி உள்ள தகவலில், சந்திரமுகி 2 படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட் பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம். விறுவிறுப்பாக உருவாகி வரும் இந்த படத்தில் வடிவேலு காமெடி வேடத்தில் நடிக்கிறார். லட்சுமி மேனன், மகிமா நம்பியார் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!