செம கடுப்பாகும் ஈஸ்வரி இந்த கல்யாணம் எப்படி நடக்குது நானும் பாக்குறேன் என சவால் விட்டு செல்கிறார்.
பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. விவாகரத்து கொடுத்ததை அடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற கோபி ராதிகாவை திருமணம் செய்ய மும்மரமான வேலைகளில் இறங்கியுள்ளார். அதேசமயம் பாக்யாவும் தனது சமையல் ஆர்டரில் பிஸியாக இருக்கிறார். இவரது முதல் ஆடரே தனது கணவரின் இரண்டாவது திருமணத்திற்கு தான். ஆனால் இந்த விஷயம் பாக்யாவிற்கு தெரியாது.
இந்நிலையில் ஈஸ்வரியை கோவிலில் சந்திக்கும் கோபி அம்மாவை கட்டிப்பிடித்து நலம் விசாரிக்கிறார். ஈஸ்வரியும் கோபி நீ எப்படி இருக்க, ஏன் வீட்டை விட்டு சென்றாய், எங்கு தங்கியிருக்கிறாய், சாப்பிட்டாயா? மீண்டும் வீட்டுக்கு வா யாரும் ஒன்னும் சொல்ல மாட்டார்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பது போல பேசுகிறார். உடனே கோபி அம்மா நானும் அதைப்பற்றி தான் பேச வந்தேன் என்கிறார். சொல்லுப்பா என்கிறார் ஈஸ்வரி, அம்மா நான் ராதிகாவை திருமணம் பண்ணிக்க போறேன் என்கிறார் கோபி. ஆனால் ஈஸ்வரியோ சும்மா சொல்லாதே, என்ன என்னிடம் விளையாடுறியா என கேட்கிறார். இல்லம்மா சத்தியமா நான் கல்யாணம் பண்ணிக்க போறேன் என கூறுகிறார் கோபி.
மேலும் செய்திகளுக்கு ...சிறுநீரகம் செயலிழப்பு உயிருக்கு போராடும் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி
இதனால் ஈஸ்வரி பேர் அதிர்ச்சி அடைகிறார். உனக்கு என்ன பைத்தியமா ஏன் இப்படி பண்ற கல்யாணமான பையன் இருக்கான், கல்யாண வயசுல ஒரு பையன், வயசுக்கு வந்த ஒரு பொண்ணு இருக்கு இதெல்லாம் தேவையா? இதெல்லாம் சரியில்ல நீ வீட்டுக்கு வந்துடு என்கிறார் ஈஸ்வரி. என்ன சொல்லியம் கோபி எதுக்காகவும் என்னுடைய முடிவை மாத்திக்கிற மாதிரி இல்லை எனக் கூறுகிறார். இத்தனை வருஷமா குடும்பத்துக்காக பிடிக்காத மனைவியுடன் வாழ்க்கையை வாழ்ந்து என்னுடைய சந்தோஷத்தை தொலைச்சிட்டேன். இனிமே நான் புடிச்ச வாழ்க்கையை வாழ ஆசைப்படுறேன். என்ன புரிஞ்சுக்கோங்க என்னும் கோபியை ஈஸ்வரி திட்டுத்திருக்கிறார். அதனால் எல்லோரும் சேர்ந்து என் ரத்தத்தை உறிஞ்சி சக்கையாக்கி தூக்கி போட்டுட்டீங்களே இன்னும் என்ன இருக்கு என கோபி ஆவேச பட ஈஸ்வரி என்னடா உலகத்திலேயே நீ மட்டும் தான் குடும்பத்துக்காக உழைக்கிற மாதிரி பேசுற? உன்னை மாதிரி நிறைய பேர் இருக்காங்க என ஆவேசப்படுகிறார் ஈஸ்வரி.
எனக்கு கல்யாணம் ஆனாலும் என்னுடைய பொண்ணுக்கு குடும்பத்திற்கும் என்ன செய்யணுமோ அதை நான் தவறாமல் செய்வேன் என கோபி சொல்ல நீ வீட்ல இருந்து செஞ்ச அது பெருமை இதே வெளியே இருந்து ஒருத்தியோட இருந்து செஞ்சா அது அசிங்கம் அப்படிப்பட்ட அசிங்கமான பணம் எங்களுக்கு தேவையில்லை என ஈஸ்வரி சத்தம் போடுகிறார். இருந்தும் என்னுடைய நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் கண்டிப்பாக கல்யாணத்துக்கு வந்து எங்களை ஆசீர்வாதம் பண்ணனும் என கூறுகிறார் கோபி.
மேலும் செய்திகள்: மூன்று நாள் தேடல்... நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா... ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய அஜித்..! வைரல் வீடியோ!
இதனால் செம கடுப்பாகும் ஈஸ்வரி இந்த கல்யாணம் எப்படி நடக்குது நானும் பாக்குறேன் என சவால் விட்டு செல்கிறார். வீட்டுக்கு வரும் ஈஸ்வரி பாக்யாவிடன் கோபியின் இரண்டாவது திருமணம் குறித்து அரசல் புருசலாக தெரிவிக்கிறார். ஆனால் பாக்யாவோ இனிமே என்னுடைய வாழ்க்கையை சமையல் தான் நடந்து முடிந்த விஷயத்துக்காக வீட்டில் முடங்கிப் போன பணம் வராது. இந்த குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லா செலவும் நானே கவனிக்கணும் அதுக்கு உழைக்கணும் எனக் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.