பிரபல தொகுப்பாளினி டி.டி.யின் லாக்டவுன் டான்ஸ்... பிரபல மலையாள பாடலுக்கு வசீகரிக்கும் வைரல் வீடியோ...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 18, 2020, 7:42 PM IST
Highlights

கொரோனா லாக்டவுனால் வீட்டிற்குள் இருந்த டிடி சமீபத்தில் தனது காலை உடைத்துக்கொண்டார். அதை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன இது? இப்படி பண்ணிக்கிட்டீங்களே என டிடி-யை விட அதிகமாக வலியால் துடித்தனர்.

விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கின்றனர். இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார். திவ்ய தர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ஏராளமான  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. “ஜோடி நம்பர்1”,“சூப்பர் சிங்கர்”, “காபி வித் த டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 

15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பிடித்துவிடுகிறது. பிரபல தொலைக்காட்சிகள் நடத்தும் விருது நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக களம் இறங்கி கலக்குகிறார். தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

 அதன் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வரும் டிடி, தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் speed Get Set Go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சினிமாவில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வெயிட்டிங். அதற்காக கலக்கலான போட்டோ ஷூட்களை நடத்தி வரும் டிடி, அந்த அசத்தல் போட்டோஸையும் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து ரசிகர்களை குஷியாக்கி வருகிறார். தற்போது சுஃபியும் சுஜாதாயும் என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற "வாதிக்கலு வெள்ளரிப்ராவு" பாடலுக்கு சோஃபாவில் அமர்ந்தபடி நடனமாடி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

 

இதையும் படிங்க: தளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குட்டி பாப்பா யார் தெரியுமா?... வைரல் போட்டோ...!

கொரோனா லாக்டவுனால் வீட்டிற்குள் இருந்த டிடி சமீபத்தில் தனது காலை உடைத்துக்கொண்டார். அதை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன இது? இப்படி பண்ணிக்கிட்டீங்களே என டிடி-யை விட அதிகமாக வலியால் துடித்தனர். அதனால் தானோ என்னவோ பம்பரமாக சுழன்று ஆடும் டி.டி.,சோபாவில் அமர்ந்தபடியே அசத்தலாக நடனமாடியுள்ளார். அப்படியும் முகபாவங்களால் ரசிகர்களை வசீகரிக்கிறார். அத்துடன் "மல்லுகளின் வீடுகளில் இந்த பாடல் தான் அதிகம் ஒலித்துக்கொண்டிருப்பதாக பதிவு செய்துள்ளார். நானும் வீட்டில் வேலையில்லாமல் இருப்பதால் இந்த பாடலை தான் அதிகம் கேட்கிறேன். இந்த சோபா கோரியோகிராப் செய்தது சகோதரி பிரியதர்ஷினி தான்" என்றும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ... 
 

click me!