
சமீபத்தில் தான் நடிகர் அல்லு அர்ஜுன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்கிற சாதனையை படைத்த நிலையில், அவரது சாதனையை தற்போது விஜய் தேவரகொண்டா சமன் செய்துள்ளார்.
பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மிக குறுகிய காலத்திலேயே ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றவர். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகர்கள் எக்கச்சக்கம். அதே போல் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது.
தற்போது இன்ஸ்டாகிராமில் 13 மில்லியனை பெற்ற இரண்டாவது தென்னிந்திய நடிகர் என்கிற சாதனையை விஜய் தேவரகொண்டா நிகழ்த்தியுள்ளதற்கு இவருக்கு பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். செய்த சாதனையை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அல்லு அர்ஜுனை விட மிக குறைத்த நாட்களில் 13 மில்லியன் ஃபாலோவர்ஸை விஜய் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிக்கும் படங்களுக்கு தெலுங்கில் மட்டும் அல்லது தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இயக்குனர் பூரி ஜெகநாதன் இயக்கி வரும், 'லைகர்' என்கிற பாலிவுட் படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.