வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் 'தத்வமசி'... வெளியானது கான்செப்ட் மோஷன் போஸ்டர்..!!

Published : Sep 02, 2021, 06:25 PM ISTUpdated : Sep 02, 2021, 06:26 PM IST
வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் 'தத்வமசி'... வெளியானது கான்செப்ட் மோஷன் போஸ்டர்..!!

சுருக்கம்

இஷான், வரலட்சுமி சரத்குமார், ரமணா கோபிசெட்டி நடிப்பில் ஆர்ஈஎஸ் என்டர்டெயின்மென்ட் எல்எல்பி தயாரிக்கும் 'தத்வமசி' படத்தின் கான்செப்ட் போஸ்டர் இன்று வெளியானது.  

இஷான், வரலட்சுமி சரத்குமார், ரமணா கோபிசெட்டி நடிப்பில் ஆர்ஈஎஸ் என்டர்டெயின்மென்ட் எல்எல்பி தயாரிக்கும் 'தத்வமசி' படத்தின் கான்செப்ட் போஸ்டர் இன்று வெளியானது.

'ரோக்' திரைப்படத்தில் நடித்து பிரபலமான இஷான் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முதன்மை வேடங்களில் நடிக்கும் அதிரடி திரைப்படம் 'தத்வமசி'.  இந்த படத்தின் மூலம் எழுத்தாளர் ரமணா கோபிசெட்டி  இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் கருத்தை மையப்படுத்திய மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

“நான் தான் அது” எனும் பொருளுடைய அத்வைத பாரம்பரியத்திலிருக்கும் ஒரு சமஸ்கிருத மந்திரம் இதுவாகும். பண்டைய இந்து நூலான உபநிஷத்தில் இருக்கும் நான்கு மகாவாக்கியங்களில் தத்வமசி ஒன்றாகும். இது பிரம்மனுடன் ஆத்மாவின் ஒற்றுமையைக் குறிக்கப் பயன்படுகிறது. தலைப்பு குறிப்பிடுவது போல, தத்வமசி ஒரு தனித்துவமான கதைக்களத்துடன் கூடிய பிரமாண்ட படமாக இருக்கும். தலைப்பைப் போலவே கான்செப்ட் போஸ்டரும் சுவாரசியமாக உள்ளது. குண்டலி (ஜாதகம்) போன்று லோகோவில் இரத்த அடையாளங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மோஷன் போஸ்டர் ‘தத்வமசி’ படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. “மனிதகுல வரலாற்றில் இதுவரை இல்லாத சக்தி, எல்லையற்ற உணர்ச்சி, பழிவாங்கலின் உச்சத்திற்கு சாட்சியாக இருங்கள்” என்று மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள ஆங்கில வரிகள் கூறுகின்றன. மோஷன் போஸ்டருக்கான சாம் சிஎஸ்ஸின் விறுவிறுப்பான இசை படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது .

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் பான் இந்தியா படமாக இது உருவாகிறது. விரைவில் இந்த படத்தின் பணிகள் தொடங்க உள்ளது. இதுவரை வெளியாகாத புதிய கதை களத்தால் மக்களை பரவசப்படுத்தும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
ராதாகிருஷ்ணா தெலு தனது RES என்டர்டெயின்மென்ட் LLP நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தை தயாரிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார், ஷ்யாம் கே நாயுடு ஒளிப்பதிவு செய்ய, மார்த்தாண்ட் கே வெங்கடேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்தியாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் படத்தில் பணிபுரிகிறார், சந்திரபோஸ் பாடல் வரிகளை இயற்றுகிறார். மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினரின் விவரங்கள் விரைவில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?