துக்க வீட்டில் தள்ளுமுள்ளு... தவறி விழுந்த ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்... வைரல் வீடியோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Sep 26, 2020, 05:14 PM IST
துக்க வீட்டில் தள்ளுமுள்ளு... தவறி விழுந்த ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்... வைரல் வீடியோ...!

சுருக்கம்

இதனால் போலீஸ் பாதுகாப்புடன் விஜய் அங்கிருந்து வெளியேறினார். அப்போது அவரை ரசிகர்கள் அவரை சூழ ஆரம்பித்தனர். அந்த கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு தேறி வந்த அவருக்கு கடந்த 4ம் தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று நெகட்டிவ் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 1.04 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 

 

இதையும் படிங்க: பட வாய்ப்பிற்காக கவர்ச்சி ரூட்டில் இறங்கிய லாஸ்லியா... குட்டை உடையில் வெளியிட்ட குதூகல போட்டோஸ்...!

இதையடுத்து செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது கடைசி நேரத்தில் அங்கு வந்த விஜய், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவருடைய மகன் எஸ்.பி.பி.சரணுக்கும் ஆறுதல் கூறினர். துக்க வீட்டில் விஜய்யைப் பார்த்ததும் ரசிகர்கள் அவரை சூழ ஆரம்பித்தனர். 

 

இதையும் படிங்க: “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சித்ரா தனது வருங்கால கணவருடன் வெளியிட்ட அசத்தல் போட்டோ... குவியும் லைக்ஸ்...!

இதனால் போலீஸ் பாதுகாப்புடன் விஜய் அங்கிருந்து வெளியேறினார். அப்போது அவரை ரசிகர்கள் அவரை சூழ ஆரம்பித்தனர். அந்த கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த நெரிசலில் ஒரு ரசிகர் தவறி கீழே விழுந்தார். அப்போது அவர் தனது காலணியை தவறவிட்டு விட, அதை தளபதி விஜய் தாமாக முன் வந்து எடுத்துக்கொடுத்தார். தளபதி ஃபேன்ஸை நெகிழ்ச்சி அடைய வைத்த இந்த காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ... 

"

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!