நேற்று வாரிசு படத்தில் இடம்பெற்ற 'தீ தளபதி' பாடல் வெளியான நிலையில்.. இந்த பாடலும் ஏகப்பட்ட பாடல்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளததாக கூறி வீடியோ போட்டு ட்ரோல் செய்து வருகிறாரகள் நெட்டிசன்கள்.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் '' திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ள தகவல் உறுதி செய்ய்யப்பட்டுள்ளது. எனவே படத்தின் பிரமோஷன் பணிகள் படுதூளாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே படத்தின் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பாடல் 75 மில்லியன் ரசிகர்களால் youtube தளத்தில் பார்த்து ரசிக்கப்பட்டு சாதனை படைத்ததை தொடர்ந்து, இரண்டாவது சிங்கிள் பாடலான தீ தளபதி பாடல் டிசம்பர் நான்காம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
அந்த வகையில் நேற்று இந்த பாடல் வெளியாகி தளபதி ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுவருகிறது. பாடியுள்ள இந்த பாடலுக்கு, பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகள் எழுதி உள்ளார். தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல், தற்போது காப்பி கேட் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
தமன் இசையில் ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் பாடலான, ரஞ்சிதமே பாடலுக்கும் இதே போல் ஏகப்பட்ட ட்ரோல்கள் வலம் வந்த நிலையில், இரண்டாவது சிங்கிள் பாடலும் ஏகப்பட்ட பாடல்களில் இருந்து காப்பியடித்து தான் என நெட்டிசன்கள் பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள்.
குறிப்பாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'நான் ஈ' படத்தில் இடம்பெற்ற மை நேம் இஸ் நானி பாடல், பக்தி பாடல் ஆன வேப்பிலையா வேப்பில்லை வெக்காளியம்மன் வேப்பிலை பாடல், ஜிவி பிரகாஷின் ஆல்பம் பாடல், உள்ளிட்ட பல பாடல்களை தீ தளபதி பாடலுடன் ஒப்பிட்டு நெட்டிசன்களால் ரோல் செய்து வருகிறார்கள்.
எனினும் இது போன்ற ட்ரோல்களை தாண்டி தற்போது தீ தளபதி பாடல் வெறித்தனமாக தளபதி ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. குடும்ப செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் கதையை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை... இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி உள்ளார், வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம், இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார் தில் ராஜு. விஜய்க்கு ஜோடியாக நேஷனல் கிருஷ்ண நடிகை ராஷ்மிதா மந்தனா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, சங்கீதா, சம்யுக்தா, போன்ற பல நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Athu thee thalapathy illa
Ani oda varava varava Nan thiruppi varva song oda copy pic.twitter.com/MIHVWXtNgV
Wasted😂 Veppilai Veppilai song copy 🤣 pic.twitter.com/bPtVSuwUgY
— Sakthi Vaas (@Sakthi_Vaas)Original or Copy 😱😂 pic.twitter.com/6RUkXiAvmr
— Mr.Hater. 😎✨ (@MrHeater6176)