Beast movie : பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி ரிலீசாகும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளது.
ஆட்டத்துக்கு ரெடியான பீஸ்ட்
விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
தமிழில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதனை காண ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
ரிலீஸ் தேதி மாற்றம்
பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி ரிலீசாகும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்காவில் மட்டும் இப்படம் ஒரு நாள் முன்னதாக, அதாவது ஏப்ரல் 12-ந் தேதியே ரிலீசாகும் என புதிய போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் பீஸ்ட் திரைப்படத்தை வெளியிடும் நிறுவனம், தனது டுவிட்டர் பக்கத்தில் ஏப்ரல் 12-ந் தேதியே பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருப்பதாகவும், இதற்காக டிக்கெட்டுகளை ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ரிலீஸாகும் முன்னரே பீஸ்ட் திரைப்படம் அமெரிக்காவில் வெளியாக உள்ளது உறுதியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... Thalaivar 169 : ரஜினி படத்துக்கு நெல்சன் தேர்ந்தெடுத்த மாஸான தலைப்பு... சின்னதா இருந்தாலும் சூப்பரா இருக்கே!