
இன்றைய நடிகர்களில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது விஜய் என்று சொன்னால் அது மிகையாகது காரணம் விஜயின் நகைசுவை தான் அது மட்டும் இல்லாமல் இவரின் நடனம் வசன உச்சரிப்பு இது தான் விஜய் குழந்தைகளை வசிகரித்த ரகசியம் இதுநாள் அவருக்கு குட்டீஸ் பேன்ஸ் அதிகம் என்று தான் சொல்லணும் அதே விஜய்யிடம் மிகவும் பிடித்த விஷயம் தான் தான் நடிகர் என் பிள்ளைகள் இல்லை என் பிள்ளைகளால் ரசிககளுக்கும் ரசிகர்களால் தன் குழந்தைகளுக்கும் தொந்தரவு வர கூடாது என்பதில் மிகவும் ரகசியமாக வைத்து இருப்பார்.
கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான இளையதளபதி விஜய் நடிப்பில் சூப்பர் ஹீரோ என்று பெயர் எடுத்தாலும். படிப்பில் சற்று பின்தங்கிய மாணவர்தான்.
தன் பிள்ளைகள் பிறந்தநாளை கூட ரசிகர்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்கிறார் அது மட்டும் இல்லை தன் பிள்ளைகள் எங்கு போகிறது என்ன படிக்கிறது என்ன என்ன சாதனைகள் செய்கிறார்கள் என்று தம்பட்டம் அடிபதில்லை என்று தான் சொல்லணும். தற்போது விஜய் மகன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி அதில் மிக சிறந்த மார்க் வாங்கியுள்ளார்.
தற்போது 10 ஆம் வகுப்பு நிறைவு செய்துள்ள சஞ்சய்க்கு, சமீபத்தில் ரிசல்ட் வெளியானது. இதில் அவர் அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ்-97, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல்-100 மற்றும் சமூக அறிவியல்-99 என மொத்தம் 494 மதிப்பெண்கள் எடுத்து சும்மா அசத்திட்டாருங்க. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாக இதனை விஜய் ரசிகர்கள் பலர் குட்டி தளபதி மதிப்பெண்களை ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர்.
ஒரு சிலர் இது உண்மையல்ல பொய் என கூறி வருகின்றனர். இது குறித்து விஜய் வாய் திறந்தால் மட்டுமே உண்மை வெளிவரும் அதுவரை காத்திருப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.