
"பெண்கள் படுகைக்கு தான் மிகச் சரியானவர்கள்" நாகார்ஜூனா தயாரிக்கும் "ராரண்டோய் வேதுகா சுதம்" பட இயக்குனர் சலபதி ராவ் பேசிய கருத்து சர்ச்சையாக வெடித்துள்ளது.
பொதுநிகழ்ச்சியில் அல்லது பேட்டியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கீழ்தரமாகவும் கேவலமாகவும் பேசி சர்ச்சையில் சிக்கிவருகின்றனர். சமீபத்தில் கூட கத்தி சண்டை படத்தின் ஆடியோ விழாவின்போது தமிழ்பட இயக்குனர் சுராஜ் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி கடும் கண்டனத்தை சந்தித்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் ஒருவர் பெண்கள் மற்றும் படுக்கை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறி சிக்கலில் மாட்டியுள்ளார்
73 வயதான நடிகர் சலபதிராவ் என்பவர் நாகசைதன்யா நடிப்பில் நாகார்ஜூனா தயாரிக்கும் புதிய திரைப்படமான "ராரண்டோய் வேதுகா சுதம்" என்ற படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, 'பெண்களால் மன அமைதி கெடும் என்று இந்த படத்தில் நாக சைதன்யா பேசியுள்ளார். அது உண்மையா என்று எனக்கு தெரியாது. ஆனால் பெண்கள் படுகைக்கு தான் மிகச் சரியானவர்கள் என்று சலபதி ராவ் தெரிவித்துள்ளார்.
இவருடைய பேச்சு படக்குழுவினர்களை மட்டுமின்றி இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இவரது பேச்சுக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் இதுகுறித்து நாகார்ஜூனா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'நான் தனிப்பட்ட முறையில் மற்றும் என் படங்களில் எப்பொழுதுமே பெண்களை மதிப்பவன். மேலும் நான் இயக்குனர் சலபதி ராவின் பேச்சை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இதே போல கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் பெண்களை நாட்டுக்கட்டை என மலையாள நடிகர் ஜெயராம் பேசியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.