கமலுக்கு அந்த சத்யா... சிபிராஜ்க்கு இந்த சத்யா... 

 
Published : May 24, 2017, 04:28 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
கமலுக்கு அந்த சத்யா... சிபிராஜ்க்கு இந்த சத்யா... 

சுருக்கம்

sibiraj sathiya flim director speech

நாதாம்பாள் பிலிம் பேக்டரி​​ சார்பில் சத்யராஜ் வழங்க சிபிராஜ் தயாரித்து நடிக்கும் திரைப்படம் " சத்யா "​,​ இப்படத்தை " சைத்தான் " வெற்றி பட இயக்குநர்  பிரதீப் கிருஷ்ணமூர்த்தி  இயக்கியுள்ளார். 

இதில் ரம்யா நம்பிசீன்​,​ வரலக்ஷ்மி , ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படத்தை பற்றி இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் " சத்யா " என்ற டைட்டில்லே மிகவும் பவர்புல்லான ஒரு டைட்டில். கமல் ஹாசன் அவர்கள் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சத்யா. 

கமல் சாருக்கும் சத்யா அவருடைய கேரியரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதே போல் இந்த சத்யா சிபிராஜுக்கு அவருடைய கேரியரில் நிச்சயம் திருப்புமுனை படமாக இருக்கும். 

சத்யா படத்தின் தலைப்பு " ராஜ்கமல் இன்டர்நேஷனல்"  நிறுவனத்தின் பெயரில் பதிவாகி இருந்தது. கமல் சாரிடம் நாங்கள் இந்த தலைப்பு எங்கள் படத்துக்கு சரியாக இருக்கும் என்று கேட்டவுடன் எங்களுக்கு "சத்யா"  என்ற மாஸ் டைட்டிலை கையெழுத்திட்டு கொடுத்தார்.

அவருக்கு என்னுடைய சார்பாகவும் எங்களுடைய யூனிட்டின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ' சத்யா" ஒரு கிரைம் த்ரில்லர். இதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கியுள்ளோம். 

தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற "ஷணம் " திரைப்படத்தின் ரீமேக் தான் “ சத்யா “. தெலுங்கில் வெளிவந்த ஷணம் திரைப்படம் வழக்கமான தெலுங்கு திரைப்படம் போல் இருக்காது , அது புதுமையான ஒரு எண்டர்டெய்னர் ஆகும். 

தமிழுக்காக கதையில் புதிதாக நிறைய விஷயங்களை சேர்த்து உருவாக்கியுள்ளோம். படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பிசீன் நடித்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார் போலீஸ் அதிகாரியாகவும் , ஆனந்த் ராஜ் மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். 

இதில் வரலக்ஷ்மியின் கதாபாத்திரம் படத்துக்கு பலம் சேர்க்கும் ஒன்றாகும். இதுவரை சிபிராஜ் 12 படங்களில் நடித்துள்ளார் , அவருடைய லுக்கை மாற்றி புதிதாக காட்ட வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையாக இருந்தது. இதை நான் அவரிடம் கூறியதும் , நிச்சயமாக நீங்கள் என்ன சொன்னாலும் செய்யலாம் என்று சிபிராஜும் முன்வந்தார்.

 இந்த லுக்குக்காக நேரமெடுத்து காத்திருந்து படபிடிப்புக்கு சென்​றோம் ​. இந்த கதைக்கு தேவை என்று நான் கேட்ட நடிகர்கள் எல்லோரையும் சிபிராஜ் எனக்கு கொடுத்துள்ளார். ரம்யாவுக்கு இப்படம் பெரிய பெயர் வாங்கி தரும்.  

இப்படத்தை வர்தா புயல் வந்த அன்று கூட படமாக்கினோம். அன்று நாங்கள் அம்பத்தூரில் உள்ள ஒரு இடத்தில் செட் போட்டு படமக்கிக்கொண்டிருந்தோம் , புயல் அடித்த பின்பு தான் வெளியே வரமுடியும் என்பதால் நாங்கள் உள்ளேயே தான் இருந்தோம். புயல் வரப்போகிறது என்று தெரியும் ஆனால் இவ்வளவு பெரிய புயலாக இருக்கும் என்று தெரியாது. 

இந்த படம் மிக சிறந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்று நிச்சயமாக கூறமுடியும். எனக்கு கமர்ஷியல் திரைப்படம் எடுக்க தெரியாது என்று நினைத்து கொண்டிருந்தேன். படத்தை இப்போது பார்க்கும் போது இது என்னை ஊக்குவிக்கும் வகையில் வந்துள்ளது. படத்தின் கதை படி கிரைம் ஒன்று நடக்கும் , அப்படி அது நடக்கும் போது எப்போதும் அது போலீஸின் பார்வையில் செல்வது போல் தான் கதை இருக்கும். ஆனால் இந்த கதை சத்யா என்ற சாதாரணமான ஒரு நபரின் பார்வையில் செல்வது போல் இருக்கும். குழந்தை ஒன்று காணாமல் போனதில் இருந்து அதை கண்டுபிடிப்பது வரை செல்லும் இந்த கதை மிகவும் விறுவிறுப்பாக நகரும் என்று தெரிவித்துள்ளார் . 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி