ரஜினிக்கு எதிராக திரும்பிய பாரதிராஜா... தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும்...

First Published May 24, 2017, 12:34 PM IST
Highlights
barathi raja political speech


இயக்குனர் பேரரசு எழுதிய 'என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. 

விழாவுக்கு பாரதிராஜா தலைமை தாங்கினார். புத்தகத்தை டி.ராஜேந்தர் வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாரதிராஜா முன்பு அனைத்து விழாக்களில் தமிழ்தாய் வாழ்த்து முதலில் பாடப் படும். இறுதியில் தேசிய கீதம் பாடப்படும். 

ஆனால் இப்போது முதலில் ஜனகன மன பாடுகிறார்கள். என்று காமெடியாக பேச தொடங்கிய அவர், அதிக தமிழ் பற்றோடு தமிழ் மொழிக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும். அதை காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். 

மேலும் தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்யலாம். ஆனால், தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா என கேள்வி எழுப்பினார்? இதை தமிழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் . தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எங்களுக்கு வயது ஆகி விட்டது. தமிழ் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழ் நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்றும் கூறினார்௦

இதற்கான முயற்சியில் தமிழக இளைஞர்கள் முழு மூச்சோடு ஈடுபட்டு தமிழையும் தமிநாட்டையும் காப்பாற்ற ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

தற்போது ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் , பாரதி ராஜா இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளது அவருக்கு எதிராக சொல்லப்படும் கருத்து என கிசுகிசுக்க படுகிறது 

click me!