மனைவி நித்தியா குறித்து நடிகர் பாலாஜி பகீர் பேச்சு... 

 
Published : May 24, 2017, 05:05 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
மனைவி நித்தியா குறித்து நடிகர் பாலாஜி பகீர் பேச்சு... 

சுருக்கம்

balaji open talk his wife

பிரபல காமெடி நடிகர் பாலாஜியின் மனைவி நித்தியா நேற்று, சென்னை மாதாவரத்தில் உள்ள காவல் நிலையத்தில், தன்னை கணவர் தாடி பாலாஜி ஜாதி பெயரை கூறி, திட்டுவதாகவும் அடித்து கொடுமை படுத்துவதாகவும் புகார் தொடுத்தார்.

இந்நிலையில் இது குறித்து மனம் திறந்துள்ள நடிகர் தாடி பாலாஜி, என்ன ஜாதி என்பது கூட தெரியாமல் தான் இருவரும் எட்டு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துக்கொண்டோம், அப்படி இருக்க நான் ஏன் அவரை திட்ட வேண்டும்.

தற்போது ஒரு சிலர் பேச்சை கேட்டுக்கொண்டு நித்தியா, இது போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக தெரிவித்த அவர். பேசி தீர்க்க வேண்டிய பிரச்னையை இப்படி பெரிதாகி கொண்டிருக்கிறர் என தெரிவித்தார்.

மேலும் அவர் போலீசில் புகார் கொடுத்ததும் பத்து பேர்  வக்கீல் என்று கூறிக்கொண்டு என்னையும் எனது மகளையும் எனது வீட்டிலேயே பூட்டி வைத்துவிட்டனர். இதெல்லாம் போலீசார் முன்னிலையிலேயே நடந்தது. அதன் பின்னர் இன்ஸ்பெக்டர் மகளை அம்மாவிடம் அனுப்பி வைக்கும்படி கூறினார். அதற்கு நானும் ஒப்புக்கொண்டு அனுப்பி வைத்தேன்.
 
நமக்குள் இருப்பது சின்ன பிர்ச்சனைதான், பேசி தீர்த்து, மகளின் எதிர்காலத்திற்காக ஒன்றாக வாழ்வோம் என்று வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியும். அவர்  உன்னை உள்ளே தள்ளாமல் விடமாட்டேன் என்று வீம்பு பேசுகிறார். எனக்கு இறைவன் மீது நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக எங்கள் இருவரையும் அந்த கடவுள் சேர்த்து வைப்பார்' என்று வருத்தத்துடன் கூறினார் பாலாஜி 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி