நடிகர் மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடிக்கும், சரக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
தமிழ் சினிமாவில், முன்னணி வில்லன் நடிகராக பிரபலமான மன்சூர் அலிகான், வில்லன் என்பதை தாண்டி, ஹீரோ, அரசியல்வாதி, காமெடி நடிகர் என தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வரும் இவர், நீண்ட இடைவெளிக்கு பின்னர், தளபதி விஜயுடன் இணைந்து, 'லியோ' படத்திலும் நடிக்க உள்ளார். சமீபத்தில் இந்த படம் குறித்து பேசும்போது, இன்னும் இப்படத்தில் நான் நடிக்கவே துவங்க வில்லை, அதற்குள் என் காட்சி எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள் அதில் துளியும் உண்மை என கூறினார்.
சென்னையில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் தான் தன்னுடைய காட்சி படமாக்கப்பட உள்ளதாக கூறிய மன்சூர் அலிகான், சரக்கு படத்தில் நடித்து முடித்த பின்னரே... லியோ படத்தில் நடிக்க உள்ளதாக கூறினார்.
இந்த படம் தமிழ்நாட்டை பாடாய் படுத்தும் மதுவை வைத்து, ஒரு புரட்சி படைப்பாக உருவாகியுள்ள மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடிக்கும் "சரக்கு" திரைப்படம். இந்த படத்தில் இவளர்க்கு ஜோடியாக வலினா பிரின்ஸ் என்பவர் நடிக்கிறார். சிறப்பு தோற்றத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார்.
இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், கிங்ஸ்லி, சேசு, தீனா, ரவிமரியா, லொள்ளு சபா மனோகர், மூஸா, மதுமிதா, வினோதினி, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், பாரதி கண்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில், மன்சூர் அலிகான் தயாரிக்கிறார். ஜெயக்குமார்.ஜே இயக்குகிறார். ஒளிப்பதிவு அருள் வின்சென்ட் - மகேஷ்.டி, இசை சித்தார்த் விபின், திரைக்கதை, வசனம் எழிச்சூர் அரவிந்தன், எடிட்டிங் எஸ்.தேவராஜ் ஸ்டண்ட் சில்வா, ஆகியோர் மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
Happy to share the first look of @rajkennedyproductions
Actor & Director & producer ‘s
Congrats team.
@jeyakumar6299 @sidvipin @kothandansr pic.twitter.com/gwIftVrraq