சமந்தாவை அடுத்து  வடசென்னையில் இருந்து விலகினார் விஜய்சேதுபதி...

 
Published : Mar 30, 2017, 05:53 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
சமந்தாவை அடுத்து  வடசென்னையில் இருந்து விலகினார் விஜய்சேதுபதி...

சுருக்கம்

vijay sethupathy left the vadachennai movie

தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் கனவு படம் என்றால் அது வட சென்னை இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை  ஏப்ரல் தொடங்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை படப்பிடிப்பு ஆரம்பம் என்று சொன்னாலே அந்த படத்தில் இருந்து எதாவது ஒரு பிரபலம் விலகிவிடுகிறார்.

சமீபத்தில் தான் இந்த படத்தில் நடிக்க நாயகியாக கமிட் ஆகி இருந்த சமந்தா விலகினார். அடுத்து தற்போது இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதியும் விலகியுள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு காரணம்  நெருங்கிய நண்பர்களான வெற்றிமாறன் தனுஷ் நட்பில் விரிசல் என்றும் இதற்க்கு காரணம் ஜி.வி.பிரகாஷ் தான் என்று கூறபடுகிறது. அது மட்டும் இல்லாமல் தனுஷின் ஈகோ பிரச்சனை தான் என்றும் சொல்லபடுகிறது. 

இந்நிலையில், ஏற்கனவே விஜய் சேதுபதி ‘வடசென்னை’ படத்தில் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியது, ஆனால் அந்த தகவல் பொய் என்று பாடல்குழுவினர் விளக்கம் கொடுத்தனர். ஆனால் தற்போது விஜய் சேதுபதி படத்தை விட்டு விலகிய செய்தி உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘வடசென்னை’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில். அடுத்த மாதம்  இரண்டாவது கட்ட படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க முடியவில்லை. 

காரணம் விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால், இப்படத்திற்காக ஒதுக்கப்பட்ட தேதியும் தள்ளிப்போனதால், இதில் அவரால் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. 

ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விலகினால் புது நடிகரை வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தும் நிலை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த குழப்பதினால் செய்வதறியாது தவிக்கின்றனர் "வடசென்னை" படக்குழுவினர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!