ஆக்ஷனில் பொறி பறக்கவிடும் விஜய் சேதுபதி... "யாதும் ஊரே யாவரும் கேளீர்" டீசர்!

Published : Mar 05, 2021, 10:27 AM IST
ஆக்ஷனில் பொறி பறக்கவிடும் விஜய் சேதுபதி... "யாதும் ஊரே யாவரும் கேளீர்" டீசர்!

சுருக்கம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரகுநாத் இயக்கத்தில்விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள திரைப்படம் "யாதும் ஊரே யாவரும் கேளீர்". படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். படப்பிடிப்புகள் முழுவதும் முடிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. விஜய்... இலங்கை தமிழில் பேசுகிறார். மேலும் விதவிதமான கெட்டப்பில், சண்டை காட்சிகளில் தூள் கிளப்பியுள்ளார். ரசிக்க வைக்கும் அழகில் தோன்றி மனம் மயக்குகிறார் மேகா ஆகாஷ். மொத்தத்தில் அனைவரும் கவரும் வகையில் உள்ளது 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தின் டீசர். 

மேலும் செய்திகள்: விஜய் டிவியின் தங்க தாமரை... தொகுப்பாளினி பிரியங்காவா இது.. ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வேற லெவல் போட்டோஸ்
 

மேலும் செய்திகள்: நடிகையோடு அடிதடி... விமலின் மோசடி குறித்து புட்டு புட்டு வைத்த நபர்! ஆதாரத்தோடு வெளியிட்ட தகவல்!
 

மேலும் மகிழ் திருமேனியின் திடுக்கிட வைக்கும் வில்லத்தனம், விவேக், ரித்விகா, கனிகா, ஜெயந்த், வித்யா பிரதீப்  உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு... விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்தை இசக்கி துரை தயாரித்துள்ளார். நிவாஸ் பிரசன்னா இசையில், வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில், ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?