
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீப காலமாக சினிமா மட்டும்மல்லாமல் சமூகம் சார்ந்த விஷயங்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். மேலும் சமூக அக்கறை கொண்ட விஷயங்களை தவறாமல் பதிவு செய்பவர்.
மேலும் தன்னை தேடி வரும் ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் ஒரு சில சர்ச்சைகளில் சிக்கி அதில் இருந்து மீண்டு வந்தார்.
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் சாலையில் உள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு சொந்தமான அப்பார்ட்மென்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக வெளியான தகவல் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது இதுகுறித்து வெளியான தகவலில்... விஜய்சேதுபதி வீட்டிற்கு ஐ.டி., துறையினர் வந்தது, ரெய்டு செய்வதற்கான நோக்கத்தில் இல்லையாம். சில நாட்களுக்கு முன்னர் விஜய்சேதுபதி, வருமான வரித் தாக்கல் செய்துள்ளார், அப்போது ஒரு சில ஆவணங்களை சமர்பிக்காமல் விட்டு விட்டதாகவும், அதனை வாங்கி கொண்டு செல்லவே அதிகாரிகள் அவரது வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் ரசிகர்களை சற்று நிம்மதியாக்கியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.