
தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீப காலமாக சினிமா மட்டும்மல்லாமல் சமூகம் சார்ந்த விஷயங்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். மேலும் சமூக அக்கறை கொண்ட விஷயங்களை தவறாமல் பதிவு செய்பவர்.
இந்த ஆண்டு இவரது சொந்த தயாரிப்பில் வெளியான ஜூங்கா, மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய படங்கள் வசூலில் சாதிக்கவில்லை என்றாலும், நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், இவர் நடித்த இமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம் போன்ற படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடித்தது. அத்துடன் அவரது கதாப்பாதிரமும் பெரிதாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து, 96, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேட்ட உள்ளிட்ட அரை டஜன் படங்களை அவர் கையில் வைத்துள்ளார்.
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் சாலையில் உள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு சொந்தமான அப்பார்ட்மென்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரது வீட்டில் ஐ.டி., துறையினர் வந்ததால் பலர், ரெய்டு தான் நடக்கிறதோ என நினைத்தனர். ஆனால், இதுகுறித்து விசாரித்த போது, சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித் தாக்கல் செய்த விஜய் சேதுபதி, சில ஆவணங்களை விட்டு விட்டதாகவும், அதனை வாங்கிச் செல்லவே அதிகாரிகள் அவரது வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.