முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கிய விஜய் சேதுபதி..! எவ்வளவு தெரியுமா?

By manimegalai aFirst Published Jun 15, 2021, 11:47 AM IST
Highlights

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் அடுத்தடுத்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, முதலமைச்சரை சந்தித்து ரூ .25 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
 

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் அடுத்தடுத்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, முதலமைச்சரை சந்தித்து ரூ .25 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் கணேஷ் வெங்கட் ராம் குடும்பத்தில் நேர்ந்த சோகம்..! ஈடு செய்யமுடியாத இழப்பு என குமுறும் நிஷா..!
 

தமிழகத்தை கொரோனா இல்லாதா மாநிலமாக  மாற்ற மத்திய - மாநில அரசும், சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைத்து கொண்டே வருவதால், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது.

மேலும் முதல்வர் ஸ்டாலின், கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கும், மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், பெட், ஆச்சிஜன் செறிவூட்டிகள், மற்றும் தடுப்பூசி போன்றவற்றின் தேவைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதி கொடுத்து உதவ வேண்டும் என்கிற அறிக்கை வெளியிட்ட பின், அடுத்தடுத்து பலர் தங்களால் முடிந்த உதவிகளை ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவும், நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தும் காலாசாலைகளை வழங்கி வந்தனர்.

மேலும் செய்திகள்:திரையுலகினரை கலங்க வைத்த மரணம்..! விபத்தில் சிக்கிய தேசிய விருது நடிகர் உயிரிழப்பு..!
 

அந்த வகையில் தற்போது கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ள தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி, தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். சமீபத்தில் தான் நடிகர் சூரி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் முதல்வரின் பொது நிவாரணத்திற்கு உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!