
‘96 படம் கேரளவில் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்ததால் அங்கு நடிகர் விஜய் சேதுபதியின் மார்க்கெட் சரசரவென உயர்ந்துள்ளதை, அவரோடு செல்ஃபி எடுத்துக்கொள்ள, ஆட்டோகிராஃப் வாங்க மலையாள ரசிகர்கள் காட்டிய கண்கொள்ளாக்காட்சி காட்டிக்கொடுக்கிறது.
இரு தினங்களுக்கு முன்பு சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ படத்தின் ஷூட்டிங் கேரள மாநிலம் ஆழப்புலா பகுதியில் நடந்தது. பொதுவாகவே ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டும் விஜய் சேதுபதி அன்றும் தொடர்ச்சியாக தன்னைத்தேடி வந்த ரசிகர்களுடன் படங்கள் எடுத்துக்கொண்டார்.
ஆனால் நேரம் ஆக ஆக விஜய் சேதுபதியின் படப்பிடிப்பு குறித்த செய்தி நகர் முழுவதும் காட்டுத்தீ போல் பரவ, படப்பிடிப்பு முடிய இருந்த மாலைவேளையில் பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் விஜய் சேதுபதியை மொய்த்துக்கொண்டனர். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிய விஜய் சேதுபதி தனது காருக்குள் நுழையவே பல நிமிடங்கள் ஆனது.
இது குறித்து கமெண்ட் அடித்த மலையாளத் திரைப்பட நிர்வாகி ஒருவர், ‘நடிகர் விஜய் சேதுபதியின் எளிமை மலையாள ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர் விரைவில் நடிகர் ஜெயராமுடன் இன்னொரு ஹீரோவாக நடிக்கவிருக்கும் மலையாளப்படமான ‘மார்க்கோனி மதாய்’ மட்டும் ஹிட்டாகிவிட்டால், அந்த விஜய் அண்ணா இடத்தை சந்தேகமில்லாமல் இந்த விஜய் அண்ணா பிடித்துவிடுவார்’ என்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.