லைஃப் டைம் சாதனை செய்துள்ள விஸ்வாசம்... கொண்டாடும் தியேட்டர்கள்!!

Published : Jan 27, 2019, 12:52 PM ISTUpdated : Jan 27, 2019, 12:59 PM IST
லைஃப் டைம் சாதனை செய்துள்ள விஸ்வாசம்... கொண்டாடும் தியேட்டர்கள்!!

சுருக்கம்

பேட்ட மற்றும்  தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டு படங்கலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ரஜினி ‘பேட்ட’ படத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் தனது முழு ஸ்டைலையும் பார்த்ததைப்போல அஜித், விஸ்வாசம் படத்தில் சென்டிமெண்டால் ரசிகர்களை கலங்க செய்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படம் தற்போது பலரின் வரவேற்பை பெற்றுள்ளது, ரசிகர்களையும் தாண்டி  குடும்பத்துடன் அத்தனை பேரையும் பல முறை பார்க்க தூண்டும் அளவிற்கு அமைந்தது. பல வருடங்களுக்குப் பின் வயதான முதியவர், மூதாட்டிகள் கூட படத்தை காண தியேட்டருக்கு வந்ததை பார்க்க முடிந்தது. இதுவே படத்திற்கு பெரும் வெற்றி தான் என சொல்லப்பட்டது.

தமிழகத்தில் மட்டுமே இப்படம் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் விஸ்வாசத்திற்கே தமிழகத்தில் நிறைய காட்சிகள் ஒதுக்கப்பட்டது. இதனால், எதிர்ப்பார்த்ததை விட சுமார் ரூ 4 லிருந்து 5 கோடி வரை நேற்று மட்டுமே தமிழகத்தில் வசூல் வந்திருக்கும் என்று கூறப்படுகின்றது.

அந்த வகையில் வசூலிலும் படம் ரூ 150 கோடிகளை கடந்ததாக செய்திகள் வந்தது. தற்போது சோலோவாக ரிலீஸ் அல்லாமல் சூப்பர் ஸ்டார் படத்துடன் களத்தில் இறங்கி பாக்ஸ் ஆஃபிஸ் தமிழ் நாட்டில் நல்ல வசூல் செய்து லைஃப் டைம் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல, பிரபல திரையரங்க நிறுவனமான ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் அதிரடியான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த போஸ்டரில் ஹைலைட் கிராசர் என்ற சிறப்பை பெற்றிருந்தாக குறிப்பிட்டுள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொற்றவைக்கு விபூதியடித்த ஆதி குணசேகரன்... ஜனனிக்கு சீக்ரெட் சொல்லும் விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது
சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!