அல்லுவுக்கு வில்லனான விஜய் சேதுபதி... தெலுங்கிலும் தொடரும் ’விக்ரம் வேதா’ டெக்னிக்...

Published : Oct 29, 2019, 01:48 PM IST
அல்லுவுக்கு வில்லனான விஜய் சேதுபதி... தெலுங்கிலும் தொடரும் ’விக்ரம் வேதா’ டெக்னிக்...

சுருக்கம்

இப்படித் தான் நடிக்க வேண்டும் என்ற இலக்கு இல்லாமல், பற்ற வைத்தால் சீறிப்பாயும் பட்டாசாக நடிப்பை வெளிப்படுத்தும் விஜய்சேதுபதி, பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். 

அல்லுவுக்கு வில்லனான விஜய் சேதுபதி... தெலுங்கிலும் தொடரும் ’விக்ரம் வேதா’ டெக்னிக்...

தமிழில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி, ”விக்ரம் வேதா” படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து தமிழ் மக்களின் மனம் கவந்த வில்லனாகவே மாறிவிட்டார் விஜய் சேதுபதி. இப்படித் தான் நடிக்க வேண்டும் என்ற இலக்கு இல்லாமல், பற்ற வைத்தால் சீறிப்பாயும் பட்டாசாக நடிப்பை வெளிப்படுத்தும் விஜய்சேதுபதி, ’பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். அதுக்கு அப்புறம் விஜய் சேதுபதிக்கு வில்லன் கேரக்டரில் நடிப்பதற்கான வாய்ப்பு குவிய ஆரம்பித்தது. ”சைரா நரசிம்ம ரெட்டி” படம் மூலம் தெலுங்கில் அடியெடுத்து வைத்த விஜய் சேதுபதி, அதில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். இந்த படம் மூலம் சிரஞ்சீவி குடும்பத்துடன் விஜய் சேதுபதி நெருக்கமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து சீரஞ்சிவி குடும்பத்தைச் சேர்ந்த வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ’உப்பெனா’ என்ற படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி சம்மதித்தார். 

இதையடுத்து அல்லு அர்ஜுனின் 20வது படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ’ஆர்யா’, ’ஆர்யா 2’, ’ரங்கஸ்தலம்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சுகுமார். அல்லு அர்ஜுன் - சுகுமார் கூட்டணி 3வது முறையாக ஜோடி சேர உள்ள படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்போதும் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டுபவர் விஜய் சேதுபதி. செம்மரக்கடத்தலை மையமாக கொண்டு உருவாகி வரும், இந்த படத்தின் கதை விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்துவிட்டதால் அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. 

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’விஜய் 64’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது கன்பார்ம் செய்யப்பட்டுள்ளது. கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டு, 5 பாட்டு, 4 பஞ்ச் டைலாக், 3 ஃபைட் என நடித்துவிட்டு போகாமல், மெகா மாஸ் ஹீரோக்களுக்கே வில்லனாக வந்து மாஸ் காட்ட வேண்டும் என்ற தில்லான முடிவை விஜய் சேதுபதியால் மட்டுமே எடுக்க முடியும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?